Thursday 6 March 2014

பாரதிய ஜனதாக் கூட்டணியில் புதிய தலைமுறைக்கு ஒரு சீட்..!



கீழே வெளியிடப்பட்டிருப்பது நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு அல்ல.

 பாரதிய ஜனதாக்கட்சி தான் மிகப்பெரிய வெற்றி பெறும், நரேந்திர மோடி தான் பிரதமராக வேண்டும் என்று அனைத்துப் பகுதி மக்களும் விரும்புகிறார்கள் என்னும் தனது விருப்பத்தை பகிரங்கமாய் வெளிப்படுத்தி பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான‌ இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து தனக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டிருக்கும் மோசடிக் கருத்துக்கணிப்பு விளம்பரம்.

மத்திய மண்டலம்

வடக்கு மண்டலம்

மேற்கு மண்டலம்

தெற்கு மண்டலம்

பான்டிச்சேரி

தெற்கு மண்டலம்


பாரதிய ஜனதா நல்லாட்சியைத் தரும் என்று நம்புவதாகவும் ,நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நரேந்திரமோடி ஏகோபித்த ஆதரவில் பிரதமராக வருவார் எனச் சொல்கின்ற‌னர். (அதே நேரத்தில் டைம்ஸ் நவ்’டி.வி.யும், சி.ஓட்டர் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்
பிஜேபிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.) இதைப் பார்க்கும் நமக்கோ பாரதிய ஜனதாவின் பிரச்சார‌  லோட்டஸ் டிவி பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.காங்கிரசுக்கு செல்வாக்கு இன்னும் இருப்பதாக அக்கட்சியின் எதிர்த்தரப்பினராலேயே ஒத்துக்கொள்ளப்படும் தென் மாவட்டங்கள், மற்றும் பாண்டிச்சேரியிலும் மக்கள் நரேந்திர மோடியைத் தான் விரும்புகின்றனர் என எழுதி வெளியிட்டிருக்கின்றனர்.

 http://www.puthiyathalaimurai.tv/articles/articles-section/generalnews/politics/election2014/election-survey-2014


தேர்தல் தேதி அறிவிப்புக்கு பல வாரங்கள் முன்பே நடத்தப்பட்டதாகச் சொல்லும் இந்தக் கருத்துக் கணிப்பு


1) தொகுதிக்கு எத்தனை பேரிடம் நடத்தப்பட்டது..?எந்தக் கால கட்டங்களில் நடத்தப்பட்டது என்பது தெரிவிக்கப்ப‌டவில்லை.

2) அனைத்துக் கட்சிகளும் யார் யாருடன், கூட்டணி யார் யாருடன் என்பது இந்தக் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்ட ஒரு மாதமாகியும் இன்று வரை முடிவாகவில்லை.ஆனாலும் அதற்குள் அரிப்பு தாங்க முடியாமல் கருத்துக் கணிப்பு.(கூட்டணிக்கு யாரும் இன்னும் சம்மதம் சொல்லாததால் அவர்களை பிஜேபி கூட்டணிக்குத் தள்ளிக் கொண்டு வரும் புரோக்கர் வேலையை மணியன் வரிசையில் புதிய தலைமுறை டீம் செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம்.)

3) பா.ஜ.க.கூட்டணி ஆட்சி தான் நாட்டுக்கு ந்ல்லாட்சியைத் தரும் எனக்  கிட்டத்தட்ட 40 விழுக்காட்டை ஒட்டிய‌ மக்கள் கருத்துக்கூறியுள்ளதாக கூறுகின்றனர்.அப்படியானால் வாக்கு விகிதத்தில் அது தான் அதிக இடத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிமுக அணி தான் முதல் இடத்தில் இருப்பதாய் தெரிவிக்கப்பட்டுள்ள‌து.

4) அதிமுக ,திமுக,போன்ற அணிகள் 2009,2014 தேர்தல்களில் பெற்ற வாக்கு விகிதத்துடன் இப்பொழுதைய வாக்கு விகிதாச்சார மாற்றம் குறித்து தனி அட்டவணை வெளியிட்டுள்ளார்கள்.இந்தப்பட்டியலில் பா.ஜ.க.வுக்கு கூட இடம் கிடைத்துள்ள‌து.ஆனால் தேமுதிக விற்கு இடம் இல்லை.(ஒருவேளை ஐ.ஜ.க வை பா.ஜ.க.விடம் அடகு வைத்தது போல தேமுதிக வை யும் பா.ஜ.க.வில் விற்பனை செய்து விட்டார் என்று நினைத்து விட்டார்களோ என்று தெரியவில்லை.

5) சொல்லி வைத்தது போல அனைத்து மண்டல மக்களும் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வரும் என கட்டியம் கூறுகின்றனர்.

இது போன்று எத்தனையோ சந்தேகங்கள் இருக்கின்றன.



து மோசடிக் கருத்துக்கணிப்பு என்று நிருபிக்க‌ நாம் வாதங்களை எடுத்து வைக்கத் தேவை இல்லை.அதனை மே  16 இல் வெளிவரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிருபித்து விடும்.

நாம் புதிய தலைமுறையின் 'நடுநிலைமை' குறித்து ஆரம்பம் முதலே எச்சரித்து வந்துள்ளோம்.இதன் நடுநிலைமைத் தன்மை உருவாக்கும் வீச்சு அதிகபட்சம் ஒரு எம்.பி சீட்டுக்கும் குறைந்த பட்சம் கல்வி வியாபாரி என்பதில் இருந்து ஊடக அதிபர் என்ற‌ நிலைக்கு உயர்வது என்பதையும் சொல்லியிருக்கிறோம்.பச்சமுத்துவோ ஒரு சீட்டைத் தாண்டி இப்பொழுது, நரேந்திரமோடி நாட்டின் பிரதமராய் ஆனால்,தமிழ்நாட்டைப்போல் இந்தியா முழுவதும் கல்வித்தந்தை ஆகி விடும் பேராசையில் இருக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் இது வரை அது கட்டி எழுப்பிய 'நடுநிலை', 'உண்மைத் தன்மை' உடனுக்குடன் என்ற‌ பிம்பம் கரைந்து வருகிரது.தேர்தல் நாள் நெருங்க நெருங்க புதிய தலைமுறையின் பித்தலாட்டம் அதிகரிக்கலாம்.

ஆனாலும் இதுவும் நல்லதுக்குத் தான்.

3 comments:

Karthi Veeramalai said...

வணக்கம் நண்பரே,
நீங்கள் யார், எவர் என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்று தான் தங்களின் ப்ளாக்கை கண்டேன். திரைமறைவு நிகழ்வுகளை(பொய் மற்றும் பித்தலாட்டங்கள்) திரை விலக்கி காட்டும் உங்கள் பணி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

eafaisal said...

தங்கள் பதிவுகளுக்கு நன்றி.ஊடகங்களின் பித்தலாட்டங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தவும்.

sami said...

புதிய தலைமுறை தொலைகாட்சி மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள்
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்குதான்
மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என
கருத்துக் கணிப்பும் செய்தியும் வெளி
யிடுறுன்றன.தங்கள் கருத்துப்படி பார்த்தால் அனைவருமே பித்தலாட்டக்
காரார்களா?