Thursday 20 February 2014

நக்கீரன்-தி.மு.க. கூட்டணியின் ஆறாவது விரல்....!






இது நக்கீரனில் நேற்று (பிப்ரவரி 19-24) வெளிவந்த ஒரு செய்திப்பதிவு.இதில் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் குறித்து வினவு இணைய தளத்தில் 15 நாட்களுக்கு முன்பே ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் பதிவில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் என்று தெளிவாக கூறியுள்ளது.ஆனால் நக்கீரனோ தனி நபர்கள் இதனைச் செய்துள்ளது போல அர்த்தம் வரும் வண்ணம் இதனை வெளியிட்டுள்ள‌து.

ஒருவேளை நக்கீரனின் புலனாய்ய்ய்ய்ய்ய்வில் இந்த அநாகரிக செயலுக்கும் த.மு.மு.க. என்னும் இஸ்லாமிய அமைப்புக்கும் தொடர்பில்லை என அறிய வந்திருக்கலாம் என நாம் ஒரு வாதத்திற்காய் வைத்துக் கொண்டாலும் அது பொய் மற்றும் இருட்டடிப்பு என பதிவின் கடைசிக்கு முந்தைய பத்தி மூலம் நாம் அறியலாம்.

//நடந்த எல்லாவற்றையும் தலைமைக்குச் சொல்லி விட்டோம்.அதனால் நாங்கள் எதையும் சொல்ல இயலாது என நழுவி விட்டார் மழுப்பலாய்.// 

இதன் மூலம் பேட்டி கொடுத்த மகராசன் தான் தனிநபர் அல்ல.தனக்குப் பின் ஒரு அமைப்பு இருகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

ஆனால் நக்கீரனோ த.மு.முக.அமைப்பின் பெயரைச் சொல்லாமல் வேண்டுமென்றே தணிக்கை செய்து விட்டது.
ஒரு வேளை நக்கீரன் 'திராவிடப் போர்வாள்' என்பதால் 'தோழமை மற்றும் நல்லிணக்கம்' அடிப்படையில் சிறுபான்மை அமைப்பின் பெயரைச் சொல்லாமல் விட்டிருக்கலாம் என சிலர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திக்கலாம்.

அப்படி எந்த வெங்காயமும் இல்லை என்பது நக்கீரனைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும்.சில காலங்களுக்கு முன் சேலம்  பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட பொழுது நக்கீரன் இந்துத்துவ‌ தீவிரவாதியைப் போல் மிக கடுமையான கட்டுக்கதைகளுடன் இஸ்லாமிய வெறுப்பு நஞ்சினைத் தொடர்ந்து சில வாரங்கள் கக்கியது.

பிறகு ஏன் ஒரு இயக்கம் தொடர்புடைய அடிப்படைவாத நிகழ்வை தனிநபர்களின் பிரச்சனையாக மாற்ற வேண்டும்..?

இஸ்லாமிய பாசம் என்று எதுவும் இல்லை.வேறென்ன ..? நம்ம மனித நேய மகக்ள் கட்சி இப்பொழுது திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டதல்லவா..?நக்கீரனும் அந்தக் கூட்டணியில் இருப்பதால் சக கூட்டாளியை விமர்சித்தால் நல்லாயிருக்காது என்பதால் தான் வேறொன்றுமில்லை.

(பெரம்பலூரில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்த பொழுது,கேரள சட்டசபை வரை அக்குற்றச்சாட்டு எதிரொலித்த பொழுதும் நக்கீரன் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணைக்  கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டதை நினைவில் கொள்க.)

இதே நேரம் அதிமுக காரன் இப்படி ஒரு சம்பவத்தை அதிமுக காரன் அந்த ரேஞ்சுக்கு கூட போக வேண்டாம்.செ.கு.தமிழரசனின் அடிப்பொடி யாராவது செய்திருந்தால் கூட நக்கீரனின் நெற்றிக்கண் எரித்திருக்கும்.இப்பொழுதோ குருடாகி விட்டது.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ன்னு டயலாக் வேற...

No comments: