Sunday 10 March 2013

'தமிழ்நாட்டு அருந்ததிராயின் போர்க்குரல்'...!


கவின்மலர் 


வின்மலர் என்னும் பத்திரிகையாளர் முகநூலில் இத்துறை குறித்து எழுதிய 3 நிலைச் செய்திகள் சரியா என்பதை விவாதிப்பதே இந்தப்பதிவு.

முதலில் வினவு இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் படித்து விடுங்கள்.

http://www.vinavu.com/2013/01/23/who-will-punish-vikatan/

இக்கட்டுரையை விட அதில் வெளிவந்த குறித்த பகுதி தான் க.மலரை பொங்கி எழச் செய்துள்ளது.

"ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர்அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாராஇல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாராமுடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?"

ஊருக்கே வகுப்பெடுக்கும் பத்திரிகை ஆளுமை நாம், முகநூலில் ’கருத்து காயத்ரி’ சின்மயிக்கு நிகராக நிறையப்பேர் நம்மை பாலோ செய்கிறார்கள்.

இது தவிர தமிழ்நாட்டில் முற்போக்கு வட்டாரத்தில்,சுற்றுச்சூழலில் இருந்து, கல்வி,இசை,நாட்டியம்,கவிதை தொடங்கி ஆவணப்படம் வரைக்கும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சியின் மையப்பொருள் குறித்தும், அத்துறை குறித்த அறிவும் தெளிவும் நம்மிடம் இருக்கிறதா என்று கூட யோசிக்காமல், அதில் கலந்து கொள்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முதலில் நம்மிடம் தான் டேட் கேட்கிறார்கள். அதன் பிறகு தான் அரங்கு புக் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட நம்மிடவேவா..?

எப்படியாவது ஆடி போய் ஆவணி வருவதற்குள் 'தமிழ்நாட்டு அருந்ததி ராயாக' ஆகியே தீருவது என்னும் ஒற்றை லட்சியத்துடன் திட்டமிட்டுத் தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

('தமிழ்நாட்டு அருந்ததி ராய்' என்று இவரை முதன் முதலில் அழைத்த பெருமை நமக்கு உடையது அல்ல.அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒன்றில் அளிக்கப்பட்டது.)

அப்படி இருக்கையில இவர்கள் யார் நம்மை விமர்சிக்க என்னும் கடுப்புடன், கேள்வி கேட்டது வினவு இணையதளம் என்பதால் தன் ரத்தத்தில் இயல்பிலேயே ஊறி இருக்கும் சிபிஎம் உணர்வுடன் கொதித்தெழுந்து விட்டார்.

அதன் விளைவு தான் முகநூலில் கீழ்க்கண்ட இந்த நிலைச் செய்தி.சனவரி 23 ஆம் தேதியிட்ட கட்டுரைக்கு சனவரி 30 ஆம் தேதி எதிர்வினை அளித்துள்ளார்.

முதல் பதிவு.

//எதற்கெடுத்தாலும் நீ வேலை பார்க்கும் நிறுவனம் மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அறிவுக்கொழுந்துகளுக்கு..! அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்துநீ வேலை செய்யும் அரசாங்கம் யோக்கியமா என்று கேட்கும் அபத்தத்தை ஒத்தது இதுஒரு அரசு ஊழியரைப் பார்த்து அரசின் அத்தனை தவறுகளுக்கும் பொறுப்பேற்கச் சொல்லும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானதுஊடகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் எவரும் இப்படியொரு அபத்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்//

(இந்த நிலைச் செய்திக்கு ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்தோம்.ஆனால் எங்கோ தவறி விட்டது.விரைவில் அதனையும் பதிவு செய்கிறோம்.)

கவின்மலரின் இந்தக் கருத்துக்கு நிறையப்பேர் வழக்கம் போல் லைக் செய்திருக்கிறார்கள்.அதில் ஊடகம் குறித்து அறியாதவர்கள் தான் அதிகம்.இவர்களைத் தவிர எல்லாம் தெரிந்த சில பத்திரிகையாளர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதன் மூலம் கவின்மலர் சொல்ல வருவது என்னவென்றால்,

அவர்கள் எழுதிய கட்டுரை,செய்திப்பதிவுக்கு மட்டுமே பத்திரிகையாளர்கள் பொறுப்பு. பிற உள்ளடக்கங்களுக்கு தாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்..?

தாங்கள் வேலை பார்க்கும் பத்திரிகை நிறுவனத்தின் யோக்கியத்தன்மை குறித்து அதில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களிடம் கேட்கக்கூடாது.

அரசாங்கத்தின் அனைத்து தவறுகளுக்கும் அதன் ஒட்டுமொத்த ஊழியர்களும் எப்படிப் பொறுப்பாக மாட்டார்களோ அதைப்போல பத்திரிகை நிறுவனத்தின் தவறுகளுக்கு அதன் ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

இனி அவரது கருத்தும் ஒப்பீடும் சரியா என்று பார்ப்போம்.

அடிப்படை அரசியல் தெரிந்த எவரும் அரசாங்கத்தின் அனைத்து தவறுகளுக்கும் அதன் ஊழியர்களைப் பொறுப்பாக்க மாட்டார்கள்.அரசாங்கத்தின் தவறுகளுக்கு அதன் அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் அவர்கள் வகுக்கும் கொள்கைகளையும்,அதன் அமைப்பையும்  தான் குறை சொல்வார்களே தவிர ஊழியர்கள் மீது பழி சுமத்த மாட்டார்கள்.

அதே சமயம் ஊழியர்கள் அவர்கள் பொறுப்பில் செய்யும் தவறுகளுக்குத் தான் அவர்களைக் குறை சொல்வார்கள்.

அதைப்போல உண்மையான அரசு ஊழியர்கள்,என்ன செய்வார்கள் தெரியுமா..?

தன்னளவில் நேர்மையாய் இருப்பார்கள்.அதே சமயம் தன் மேலதிகாரியில் இருந்து அரசின் உயர்மட்டம் வரை யார் தவறு செய்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள்.

அரசின் ஊழல்களை அதன் அதிகார துஷ்பிரயோகத்தை அதன் முறைகேட்டை அதன் தவறான கொள்கைகளை,சமூகத்திற்கு எதிரானவற்றை தொடர்ந்து தட்டிக் கேட்பார்கள்,ஒத்த கருத்துடைய இதர சங்கங்கள் மற்றும் பொதுமக்களையும் தங்களுடன் இணைத்து போராடுவார்கள்.

ஊழலில் இருந்து தனியார்மயமாக்கம் வரை நாட்டில் அனைத்து ஊழியர் சங்கங்களும் இதைத் தான் செய்கின்றன.

இதை தான் வினவு உங்களிடம் கேட்டது.

பெண் உரிமை,பெண்ணியம்,ஆண் பெண் பாகுபாடு என சம்பந்தம் இல்லாமல் தர்மபுரி கலவரத்துக்கு   புரட்சிகரக் கட்டுரை எழுதியிருக்கின்றீர்களே,அறச்சீற்றம் கொண்டிருக்கின்றீர்களே ஏன் கொஞ்சம் உங்கள் கடைக்கன் பார்வையைத் திசை திருப்பி இத்தனை பிரச்சனைகளுக்கும் நாற்றங்காலாய் ஆபாசம்+அருவருப்பு+வக்கிரம் என அனைத்தும் கலந்த கலவையாய் பத்திரிகை நடத்தும் விகடன் நிறுவனத்தின் டைம்பாஸ் இதழைக் கண்டிக்க கூடாது என்று தான் கேட்டது..?

கண்டிக்கும் அளவுக்கு நீங்கள் ஒர்த் இல்லை என்று தெரிந்ததாலோ என்னவோ வழக்கமாக எழுதுவது போல் ஒரு மொக்கை கவிதையையாவது எழுதக் கூடாது என்று தான் சரியாக வினவியது.விகடனின் டைம்பாஸ் இதழில் வெளிவந்த கழிசடைத்தனத்துக்கு கவின்மலரைப் பொறுப்பேற்கச் சொல்லவில்லை.

இன்னும் சொல்லப்போனால் போர்க்குணமிக்க அரசு ஊழியர்கள் அரசின் தவறுகளுக்கு எதிராய் எப்படிப் பொங்கி எழுகிறார்களோ அந்த அளவுக்கு கூட விகடன் நிறுவனத்திற்கு எதிராகப் பொங்க வேண்டாம்,போராட்டம் நடத்திடக் கூட வேண்டாம்.குறைந்தபட்சம் ஒரு மொக்கை கவிதை எழுதியாவது எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே என்று தான் கேட்டது.எந்த விதத்திலும் டைம்பாஸ்  வக்கிரத்திற்கு கவின்மலரைப் பொறுப்பாக்கவோ குற்றம் சாட்டவோ இல்லை.

ஆனால் கவின்மலர் லாவகமாக வார்த்தைகளில் கயிறு திரிக்கிறார்.அவர்கள் சொல்லாத ஒன்றை இவராக வலிந்து திணிக்கிறார்.

வேலை பார்க்கும் பத்திரிகை நிறுவனத்தின் கருத்துக்களுக்குப் பொறுப்பேற்கச் சொல்கிறார்கள்.இது அரசின் தவறுகளுக்கு அதன் ஊழியர்களைப் பொறுப்பேற்கச் சொல்வதைப் போன்றது என்று இவராக,இவருக்குச் சாதகமான,அபத்தமான ஒரு ஒப்பீட்டை தெரிந்தே திட்டமிட்டே உருவாக்குகிறார்.சம்பந்தம் இல்லாமல் கயிறு திரிக்கிறார்.

முட்டாள்தனம் வினவுத் தளத்திடம் இல்லை.கவின்மலரிடம் தான் இருக்கிறது.சிபிஎம் மில் பாடம் பயின்றவர் அல்லவா..இவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?


கவின்மலர் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜன் எம்.பி.


இனி அவரது நிலைச் செய்தியிலேயே இன்னொன்றும் இருக்கிறது.

//ஊடகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் எவரும் இப்படியொரு அபத்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.//

வினவு தளத்துக்கு ஊடகத்தின் தன்மை குறித்து ஒன்றும் தெரியாது என்று சொல்கிறார்.
வினவு தளத்தின் அரசியலில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.அதனை விவாதிக்கவும் எதிர்த்து வாதம் செய்யவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால் வினவு தளத்தை நடத்துபவர்கள் பத்திரிகை துறையின் தன்மை அறியாதவர்கள் என்று போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கும் தவறை ஆர்.எஸ்.எஸ்.காரன் கூட அவ்வளவு ஏன் படித்த சி.பி.எம். காரன் கூட செய்ய மாட்டான்.

கவின்மலருக்கு வயது தோராயமாய் 40 இருக்கும். ஆனால் கவின்மலரின் ஒட்டுமொத்த பத்திரிகை உலக அனுபவமும் புதிய தலைமுறையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததில் இருந்து இந்தியா டுடேவில் சேர்ந்தது வரை  3 ஆண்டுகள் தான்.

ஊடகத்தின் தன்மை அறியாதவர்கள் என்று கவின்மலர் சொல்லும் வினவு இணையதளத்தை நடத்துபவர்கள் அவர்களுக்கான ஊடகத்தை நடத்த ஆரம்பிக்கும் பொழுது கவின்மலர் ஓரத்த நாடு ஆரம்ப பள்ளிக்கூடத்தில் சிலேட்டில் ஆசிரியை கைபிடித்து அ னா ஆவன்னா என்று எழுத ஆரம்பித்திருப்பார்.

ஆனால் இந்த லட்சணத்தில் கவின்மலர் ஊடகத்தின் தன்மை குறித்து வினவு தளத்துக்கு வகுப்பெடுக்கிறார்.

ரி கவின்மலர் இப்பொழுது அதிகமாய் ஊடகங்கள் குறித்தும் அதன் தவறான போக்குகள் குறித்தும் அதிகமாய்க் கவலைப்படுகிறாரே அதில் எள்ளளவும் நேர்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

இது அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைச் செய்திகள் பற்றிய விமர்சனம் இது.

கவின்மலரின் இந்த வாரக் கவலை + அறச்சீற்றம்.





இது கவின்மலர் குமுதம் ரிப்போர்ட்டர் குஷ்பு-கருணாநிதியைத் தொடர்புபடுத்தி எழுதியமைக்கு எதிராய் எழுதப்பட்ட நிலைச் செய்திகள்
.
இது மிக மிகச் சரியான கருத்து.குமுதம் ரிப்போர்ட்டரின் கேவலமான இதழியல் யுத்திக்கு இது சரியான எதிர்வினை.ஒரு நாம் கவின்மலரின் எழுத்தில் உடன்படுகிறோம்.

ஆனால் இதைச் சொல்வதற்கு கவின்மலருக்கு தகுதி இருக்கிறதா,,>.?

கவின்மலர் இதற்கு முன் வேலை பார்த்தது ஆனந்த விகடனில்.இப்பொழுது வேலை பார்ப்பது இந்தியா டுடேவில்.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழைப் போல் ஆனந்த விகடன் இதுவரை எதையுமே எழுதியதில்லையா..? அப்பொழுது கவின்மலர் எங்கே போனார்..?


நயன்தாரா யாருக்கு என்று 9-சனவரி-2013 இதழில் அட்டைப்படம் வைத்ததே..?


நயன்தாராவைப் பெண் என்றும் மனுஷி என்றும் பாராமல் அவரைப் பொது வெளியில் நிறுத்தி பொதுச் சொத்தாக்கி அதனை அண்ணனும் தம்பியும் ஏலம் போட வைப்பது போல் கேள்விகளைக் கேட்டுப் பதில்களை வாங்கி அதனை அட்டையில் மலினமான வியாபார யுக்தியாக வைத்து விற்றுத் தள்ளியதே..?

இந்தக் கட்டுரை பெண்களை வீடுகளுக்குள்ளூம் சுவற்றுகளுக்கும் அடைபட வைக்கும் வித்தை என்றும் இது தான் ஜர்னலிசமா என்றும்..? இந்தப்பிழைப்பு தேவையா என்றும்,பெண் என்பதாலேயே நயன்தாரா தாக்கப்படுகிறார் என்றும் ஏன் விகடனுக்கு எதிராய்  கொதித்தெழ வில்லை..?

அப்பொழுது கவின்மலர் எங்கே சென்றார்..?

எங்கும் செல்லவில்லை.ஆம்  நயன்தாரா யாருக்கு என்னும் ஏலம் வந்த பக்கத்துக்கு அடுத்த பக்கம் கவின்மலர் தர்மபுரி கலவரத்தை வைத்து அன்பானவர்களுக்கு ஒரு கடிதம் என்ற பெயரில் சமூகம் பெண்களை பாகுபாட்டுடன்,இழிவுடன் நடத்துகிறது,மாற வேண்டும் என்று நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.  

அப்பொழுது ஏன் இப்பொழுது குமுதம் ரிப்போர்ட்டரைத் திட்டுவது போல் திட்டவில்லை.இத்தனைக்கும் அந்த இதழ் வந்த சமயத்தில் விகடன் குழுமத்தில் இருந்து நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி ராஜினாமா கடிதத்தைக் கூட அளித்து விட்டார்.விகடன் குழுமத்தை விமர்சித்தாலோ,அதற்கு எதிராக மொக்கை கவிதை எழுதினாலோ வேலை போய் விடும் என்ற பயம் கூட கிடையாது.

குஷ்புவுக்கு ஒரு நியாயம்..? நயன் தாராவுக்கு ஒரு நியாயமா..? என்பதை விட விகடனுக்கு ஒரு நியாயம்.குமுதம் ரிப்போர்ட்டருக்கு ஒரு நியாயமா என்னும் கேள்வி தான் சரியாக இருக்கும்.

இது மட்டும் அல்ல..இன்னும் நிறையச் சொல்லலாம்.

தன்னை இஸ்லாமியத் தோழியாக காட்டிக் கொள்ளும் கவின்மலர்,ஊடகங்களில் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு அதிகரித்து விட்டதாய் ஏகத்துக்கும் வருத்தப்படும் கவின்மலர்,

அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட சமயம்,அப்சல்குரு குறித்து ஜூனியர் விகடனில் சிறப்புச் செய்தியாளர் ஆர்.பி.என்னும் புனைப்பெயரில் ஒளிந்து கொண்டு விஷம் கக்கிய பொழுது எழுதிய பொழுது அதனை எதிர்த்து கனத்த மவுனம் தானே காத்தார்.முகநூலில் நிலைச் செய்தி கூட்ப் போடவில்லை.அவ்வளவு ஏன்..?குறைந்த பட்சம் அலுவலக வாசலில் உள்ள ராமச்சந்திரன் டீக்கடையில் கூடப் புலம்பவில்லையே..?

ஒவ்வொரு டைம்பாஸ் இதழ்களுக்கும் எதிராகத் தனி இயக்கமே கவின் மலர் தலைமை ஏற்று நடத்தலாமே..?

சரி பழைய கதையை விடுவோம்.இப்பொழுது வேலை பார்க்கும் இந்தியா டுடே இதழானது டைம்பாஸுக்கு முன்னோடியாக மாதம் ஒரு செக்ஸ் சர்வே என்று எழுதித் தள்ளுகிறதே அதனை எதிர்த்து என்ன செய்தார்..?

குமுதம் ரிப்போர்ட்டர் இதழை நடத்துபவர்கள் செய்யும் கேவலமான வேலையை இதழ் தோறும் இந்தியா டுடே செய்கிறதே அதைக் கண்டு கவின்மலரின் நெஞ்சு கொதிக்க வேண்டாமா..?





ஆனால் கொதிக்கவில்லையே..?

தான் எழுதிய கட்டுரைக்கு மட்டுமே நான் பொறுப்பேற்பேன் என்று கவின்மலருக்குச் சொல்ல உரிமை உண்டு.

அத்துடன் நிறுத்திக் கொண்டால் அது நல்லது. இத்துறையில் உள்ள பெரும்பாலான திறமையான பத்திரிகையாளர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் பெரும்பாலோனோருக்கு பத்திரிகை நிறுவனங்கள் செய்யும் அனைத்து அயோக்கியத்தனங்களும் நன்கு தெரியும்.ஆனால் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்காக அதனைச் சகித்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் சகித்துக் கொள்ளும் அதே சமயம் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தை மட்டுமல்ல பிற எந்த நிறுவனத்தையும் கடுமையாகப் பெரும்பாலான நேரங்களில் விமர்சிப்பதில்லை.

ஏனென்றால் ஒன்றாம் தேதி வரும் சம்பளத்திற்காக தன் நிறுவனத்தை விமர்சிக்காமல் பிற நிறுவனத்தைப் பொது வெளியில் விமர்சித்தால் அதில் நேர்மை இல்லை என்பதும் அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.அதனால் தன் நிறுவனத் தவறுகளை மட்டுமல்ல அனைத்து நிறுவனத்தின் தவறுகளையும் ஜீரணித்துக் கொண்டு கடந்து போகின்றார்கள்.தங்களின் நெருங்கிய வட்டத்துடன் விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறார்கள்.

பத்திரிகையாளர்களின் வாழ்க்கைச் சூழல் அப்படி.இது சரியா தவறா என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உள்ளது.

ஆனால் கவின்மலரோ தான் வேலை பார்க்கும் இந்தியா டுடே,விகடன் நிறுவனங்கள் எவ்வளவு கேவலமாக எழுதினாலும் அவர்களை விமர்சிக்க மாட்டார்.

அப்சல் குரு தொடர்பான பதிவை கண்டுகொள்ளாத அதே சமயம், தினமணியில் சமச்சீர் கல்விக்கு எதிரான மதியின் கார்ட்டூனுக்காக கொதித்தெழுவார்.

தினத்தந்தி நிருபருக்கு ரிப்போர்ட்டிங்கே தெரியலை என்றும் நக்கல் செய்வார்.(ஸ்ஸ் பா முடியலை)

இந்தியாடுடே வில் வேலை பார்ப்பார்.அந்த நிறுவனங்கள் வக்கிரம்,ஆபாசத்தை, பகிரங்கமாய் கடை விரித்தாலோ,இந்துத்துவத்தை தனது எழுத்துக்களில் கொண்டு சென்றாலோ அதனை மறந்தும் திரும்பிப் பார்க்க மாட்டார்.

ஆனால் அதே சமயம் போட்டி குழுமமான குமுதம் ரிப்போர்ட்டர் எழுதினால் பொங்கு பொங்கு என்று பொங்குவார்.

விமர்சித்தால் அனைத்தையும் நடுநிலையுடன் விமர்சிக்க வேண்டும்.

அதை விடுத்து அனைத்தையும் விமர்சிப்பவர் என்று காட்டுவதற்காக,முற்போக்கு ஒளிவட்டம் சூட்டிக் கொள்வதற்காக,தன்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதாக காட்டுவதற்காக தான் இருக்கும் பத்திரிகை உலகினை விமர்சிப்பதாக காட்டிக் கொண்டு,

சீனிவாசன் சம்பளம் கொடுத்தால் விகடனைத் தவிர்த்து அனைத்தையும் விமர்சிப்பது,இந்தியாடுடே காரன் சம்பளம் கொடுத்தால் அதை விடுத்து அனைத்தையும் விமர்சிப்பது என்பது பச்சோந்தித்தனம்.

இது எப்படி இருக்கிறது என்றால் சிபிஎம் காரர்கள் போயஸ் தோட்டத்தில் 2 சீட் வாங்கிய காலங்களில் அந்த விசுவாசத்துக்காக கருணாநிதியை திட்டுவதைப் போலவும்,கோபாலபுரத்தில் வாங்கும்  2 சீட் வாங்கிய காலங்களில் அந்த விசுவாசத்துக்காக ஜெயலலிதாவைத் திட்டுவதைப் போலவும் இருக்கிறது.

நாம் கூட கவின்மலர் குறித்த கடந்த விகடனில் பிரகாஷ்காரத் பேட்டி ஒரு என்சைக்ளோபீடியா என்னும் பதிவில் அவர் பத்திரிகையாளரா என்று விமர்சித்து அவர் நேர்காணலும் அதற்கான அவரது தயாரிப்புக்களும் கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது என்று எழுதி இருந்தோம்.ஆனால் அவரோ தான் கை தேர்ந்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாட்டின் மூலம் நிருபித்து வருகிறார்.

முறையற்று அபகரித்த குமுதம் குழும நிறுவனங்களைத் தக்க வைப்பதற்காக தொடர்ந்து உள் நோக்கத்துடன் கருணாநிதியை விமர்சித்தும் ஜெயலலிதாவுக்குத் துதி பாடுவதையும் பிழைப்பாய் வைத்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழை இப்பொழுது நடத்துபவர்களுக்கும்,

திமுக ஆட்சியில் தான் பெற்ற பொருளாதார இன்னபிற அனுகூலங்களுக்காக தொடர்ந்து கருணாநிதிக்குத் துதிபாடியும்,ஜெயலலிதாவை விமர்சித்தும் நக்கீரன் இதழை நடத்துபவர்களுக்கும்,

தனது திறமையைக் காட்டிலும் அதிகமான சம்பளமும் பதவியும் கொடுக்கிறார்கள் என்பதற்காய் தான் வேலை பார்க்கும் நிறுவனங்களின் மோசமான இதழியலைக் கண்டு கொள்ளாமல் அடைகாத்து,அதே சமயம் போட்டி இதழ்களின்&பிற இதழ்களைப் பகிரங்கமாய் பொதுவெளியில் விமர்சித்து போராளிப் பட்டம் கட்டிக் கொள்ளும் கவின்மலருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது..?

இதற்கான விடையை வருங்கால 'தமிழ்நாட்டு அருந்ததி ராய்' தான் சொல்ல வேண்டும்.


http://www.youtube.com/watch?v=KL1RXdNYNHQ


தொடர்புடைய இணைப்புக்கள்.

http://kalakakkural.blogspot.in/2012/05/blog-post_11.html

.

9 comments:

Anonymous said...

என்னது தமிழ்நாட்டு அருந்ததிராயா... சுத்தம்! விடுதலைக்குப் போராடும் இனங்களுக்கு எதிராகத் தான் கவின்மலர் கருத்து சொல்லி வந்திருக்கிறார். அவரப் போயி...?

வவ்வால் said...

கவின் மலர் ? யாருப்பா இதெல்லாம் நீங்களே பிராபல்யம் ஆக செய்யிற "ஃப்ளெக்ஸ் பேனர்" டெக்னிக்கா :-))

//விமர்சித்தால் அனைத்தையும் நடுநிலையுடன் விமர்சிக்க வேண்டும்.
//

அம்பி ,கல்வியாவாரியிடம் வேலைப்பார்த்துக்கிட்டு கல்விக்கு கடன் கொடுக்கலை ,வங்கி மோசம்னு எழுதுறவங்க, திராவிட சொம்பு பத்திரிக்கையாளர்கள் பற்றி எல்லாம் ஒன்னிமே குமுற மாட்டேங்குறிங்க ,எல்லாம் பெருமாளுக்கே வெளிச்சம் :-))

Anonymous said...

அண்ணே, டெம்ப்ளேட்டை மாத்துங்க. கருப்பு பின்னணியில் வாசிக்க ரெம்ப சிரமமா இருக்கு.

AAR said...

She works in India Today and talks so much - good joke.

Anonymous said...

1.kavinmalar is not a member of cpm
2.She is not an experienced journalist.
3.She is appointed as associate copy editor directly from chief reporter position in vikatan
4.she never spoke against her employers.

Anonymous said...

என்னது தமிழ்நாட்டு அருந்ததிராயா....

தலை முடி விரித்து போட்டால் அருந்ததிராயா....கொடுமை சார்..

-Maakkaan

jositha said...

ithu yetha pathiyum kalaga kural kuda pesaevae illayae ippo itha pathi mattum odi vanthu solringa

Anonymous said...

அட துலுக்க பன்னாடை கலகக்குரலே!

Pandian said...

பதிவு நன்றாக இருந்தது