Thursday 29 March 2012

பதறும் வரதராஜன் -மடியில் கனம்;வழியெல்லாம் பயம்...!


                                             
                                                              வரதராஜன்

கடந்த ஒரு வாரமாக பதட்டமும் பரபரப்புமாக பயந்து நடுங்கியும் இருக்கும் நபர் யாரென்று தெரியுமா?

சாட்சாத் வரதராஜன் தான்.

இதுவரை ஒரு மிகப்பெரிய பத்திரிகை நிறுவனத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற இறுமாப்பிலும் திமிரிலும் இருந்து வந்த வரதராஜன் இப்பொழுது கொடைக்கானல் குளிரில் கூட வியர்க்கும் நிலைக்கு வர என்ன காரணம்..?

கடந்த இருவார காலமாக நடைபெற்ற சில நிகழ்வுகள்,சில காய் நகர்த்தல்கள்,சில சமிக்ஞைகள் தான் என பத்திரிகை வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

முதலில் குமுதம் பிரச்சனையில் வெளியே தெரியாத ஒரு அரசியல் பிளாஷ்பேக்.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஜவஹர் பழனியப்பன் அளித்த மோசடிக் குற்றச்சாட்டினால் சென்னை மாநகரக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட வரதராஜன், மு.க.ஸ்டாலின் மனைவியின் வேண்டுகோளின்படி மு.க.ஸ்டாலின் கொடுத்த பிரஷரினாலும், ஜவஹர் பழனியப்பன் கைது வரைக்கும் வேண்டாம் என்று கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டதாலும் கைதாகி புழல் சிறைக்குள் செல்லாமல் தப்பித்தார்.

அதன்பின் சிறிது காலம் பேச்சுவார்த்தை என்று காலம் இழுத்தடித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வந்தது. கருணாநிதியின் ஆட்சியும் முடிந்தது.

அதன் பின் வரதராஜன் சற்று நிம்மதியானார்.அதற்குக் காரணம் ஆள் பிடிக்குற லட்சுமணன் மூலம் ஏற்பட்ட (சசிகலா) நடராஜன் நட்பு தான் இதற்குக் காரணம்.நடராஜனின் நட்பினை லட்சுமணன் என்னும் மணா உருவாக்கித் தந்தார்.அதன் பின் நடராஜனின் பேட்டி,அவரது கருத்து துதிபாடல்கள் என ரிப்போர்ட்டர் பட்டையைக் கிளப்பியது.

                                             
                                      லட்சுமணன் என்ற மணா

ஆட்சியின் லகான் நம் நட்பு வட்டத்தில் வந்து விட்டது.இனி நம்மை யாரும் அசைக்க முடியாது எனக்கருதிய பின் குமுதம் குழுமத்தை முழுவதையும் முரட்டுத் துணிச்சலில் ஆட்டையப்போட்டார்.அதனை எதிர்த்து வழக்கு,தடையாணை,உச்ச ,உயர்நீதிமன்றம் என இழுத்துக் கொண்டே போய் இப்படியே இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் வழக்கினை இழுத்து விடலாம் எனக் கணக்குப் போட்டார்.

இதனால் கொஞ்ச நாள் கழித்து ஜவஹர் பழனியப்பன் வேறு வழியின்றி சொத்தினை நமக்கே ஒரு செட்டில்மெண்ட் போட்டுக் கொடுத்து விடுவார்.அதன்பின் பத்திரிகை ஜாம்பவான் ஆகி விடலாம் என மனக் கணக்குப் போட்டார்.
ஆனால் அவரது மனக் கணக்கு தப்பாகிப்போனது.நடராஜன் கும்பல் ஒட்டு மொத்தத்தையும் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார்.இதனை வரதராஜன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது? திரும்பவும் நடராஜன் குடும்பத்தைக் கட்சியில் சேர்ந்து விடுவார்களா, இல்லையா? நடராஜனை எதிர்த்து எழுதுவதா, வேண்டாமா என்று குழப்பம் அடைந்திருக்கிறார். இந்த ஊசலாட்டம் அந்தக் காலகட்டத்தில் டிசம்பர் இறுதியில் வந்த ரிப்போர்ட்டர் இதழ்களைப் பார்த்தால் நன்றாகவே தெரியும்.

நடராஜனைக் கட்சியை விட்டு விலக்கிய உடன் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் அனைத்தும் அதனை எழுதி விற்றுத் தள்ள, வரதராஜனோ, அதன்பின் வந்த இரண்டு ரிப்பொர்ட்டர் இதழ்களிலும் அமைதி காத்தார். திரும்பவும் சேர்ந்து விட்டால் நல்லதே என சந்தோஷப்பட்டார். ஆனால் இனி தற்பொழுதைக்கு உறவு ஏற்படாது எனத் தெரிந்ததும் தான் துணிந்து நடராஜனை எதிர்த்து எழுதுகிறார்.

நடராஜனே,’’காரியம் நடக்குறதுக்காக என்னவெல்லாம் பண்ணாங்க இப்ப இப்படி எழுதுறாங்களே” என்று தன்னைப் பார்க்கச் சென்றவர்களிடம் சொன்னதும் நடந்தது.
-----

டுத்து, தன்னைக் காத்துக்கொள்ள யாரைப் பிடிப்பது என்று யோசிக்கிறார். அப்பொழுதும் மணா உதவிக்கு வருகிறார். (மணாவுக்கு பத்திரிகை வேலையைத் தவிர்த்து எத்தனை வேலைகள்... மணா ரொம்ப பாவம் இல்ல..!!!)

அதன் தொடர்ச்சியாக, சோ.ராமசாமியின் நேர்காணல் ரிப்போர்ட்டரிலும்,குமுதம் இதழில் வெளிவருகிறது.


சோவின் ‘முகமது பின் துக்ளக்’ நாடகம், குமுதம் ஆஹா எப்.எம்.மில் ஒளிபரப்பாகிறது.
எப்படியாவது யாரையாவது ஆள் பிடித்து தனக்குப் பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணத்தில் இத்தனையும் நடக்கின்றன. 


பிறகென்ன.... ’இனி நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்று மறுபடியும் இறுமாப்புக்கு மாறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தான், கடந்த ஒரு வார நிகழ்வுகள் மறுபடியும் வரதராஜனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. அதனால்தான் அவரது பதட்டமும் பயமும் குமுதம் இதழில் தெரிகின்றன.

அதற்கு என்ன காரணம் என்று இறுதியில் பார்ப்போம்.

வெளியில் வரது காட்டிக்கொள்ளும் பத்ட்டத்தை பத்திரிகைகளிலும் சாதாரணமாகவே பார்க்க முடிகிறது.
கடந்த ஒரு வருட காலமாக வரதராஜன் தனது கட்டுப்பாட்டில் உள்ள இதழ்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான செய்திகள் எதையும் வெளியிடுவதில்லை.அதற்கு ஒரே காரணம். எங்கே தன் மீது உள்ள மோசடி வழக்கு மீண்டும் உயிர் பெற்று விடுமோ,  புழல் சிறையில் தங்க வேண்டி வருமோ என்ற பயம் தான். காஞ்சி மடாதிபதிக்கே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நேர்ந்த கதி வரதுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் பத்திரிகை விற்பனை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று ரொம்பவும் அடக்கி வாசித்தார்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக வழக்கத்தை விடவும் மிகவும் பம்முகிறார்.

கடந்த 21-03-2012 புதன்கிழமை அன்று சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு வெளியாகி அது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாகி மக்களும் மறந்து அன்றே அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள்.

23-02-2012 வெள்ளியன்று வெளியாக வேண்டிய ரிப்போர்ட்டர் இதழ் 22-02-2012 மாலை 4 மணிக்கு முடிக்கப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டரில் சங்கரன்கோவில் வெற்றியை அட்டைப்படமாக வைக்கிறார்கள்.


புலனாய்வு, புடலங்காய் இதழ்களுக்கு எத்தனையோ செய்திகள் காத்திருக்க ஏன் நாடு முழுவதுக்கும் தெரிந்த செய்தியை அட்டையில் வைக்க வேண்டும்..?

இதற்கிடையில் என்ன நடந்தது? பொறுத்திருங்கள்.

மேலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு வெளியாகி எட்டு நாள் கழித்து இன்று புதன்கிழமை (29-08-2012)வெளியான (04-04-2012)  தேதியிட்டு வெளியான குமுதம் அட்டையில் கம்பீர வெற்றி என்று சங்கரன்கோவில் வெற்றியை கவர்ஸ்டோரி செய்துள்ளார்கள்.



தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடிந்த பின்னும் இப்படி பம்முகிறாரே வரது, என்று நினைத்தபடி வாங்கினால் உள்ளே முக்கியமாய் நான்கு செய்திகள்.சங்கரன்கோவிலில் வெற்றிபெற்ற முத்துலட்சுமி பேட்டி,வெற்றி குறித்து கவர் ஸ்டோரி,என ரொம்பவும் பம்மியுள்ளார்.இத்தனைக்கும் மேலே குமுதம் ப்ப்ளிகேஷன்ஸ் சேர்மன் கம் நிர்வாக இயக்குனர் என்று சொல்லிக் கொள்ளும் வரதாரஜன் முதல்வருக்கு முதல் பக்கத்திலேயே ஒரு மடலும் எழுதியுள்ளார்.

அது இது தான்.



இனி இதில் நமக்கு எழும் சந்தேகம் இது தான்.

1) ஒரு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக பாராட்டி ஒரு பத்திரிகை தலையங்கம் எழுதலாம்.
ஆனால் முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஒரு மிகப்பெரிய பத்திரிகை அதிபர் என்று சொல்லிக் கொள்பவருக்கு எதனால் வந்தது?மடியில்  கனமில்லை என்றால் எதற்கு பயம்?

2) உண்மையாய் அப்படி கடிதம் எழுதியவர் என்ன செய்ய வேண்டும்? முதல்வருக்கு கடிதத்தை தபாலில் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் அளிக்க வேண்டும் அல்லது முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் பகிரங்கமாக வாசகர்கள் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

3)அதுவும் கடிதத்தில் உள்ள செய்திக்குத் தொடர்பு இல்லாமல் பதவியேற்ற காலகட்டத்தில் முதல்வருடன் எடுத்த பழைய புகைப்படத்தை, இப்போது வெளியிட வெண்டிய அவசியம் என்ன? தனக்கு முதல்வரிடம் செல்வாக்கு இருப்பதாக ஊருக்குள் காட்டும் உத்தியா இது..?

4)அதிலும் குறிப்பிட்ட வரிகளைக் கவனியுங்கள்..

”சில சுயநலவாதிகள்,ஆட்சி,அதிகாரத்தில் இருப்பவர்களையெல்லாம் துதிபாடி பரிசு பெறும் தருமிகள் போல உங்களை நெருங்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைத்து உங்கள் லட்சியத்தை நீங்கள் எட்டிப்பார்க்க வெண்டும்.”

(ஆஹா..என்ன ”அருமையான” வரிகள்..நீங்கள் இதை எழுதும் முன்பு உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவில்லையா மிஸ்டர் வரதராஜன்..கிரைம் எண் 196/2010)

இதனைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? நாட்டின் அனைத்து லகானையும் கையில் வத்துள்ள முதலமைச்சரை சுயநலவாதிகள் நெருங்க முயற்சிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஏறக்குறைய அழுதிருக்கிறார். எதனால்.?
இவ்வளவு பம்மும் அளவுக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

ஆதாயம் இல்லாமல் வரது ஆத்தில இறங்குவாரா என்ன?எதனால் இப்பொழுது அளவுக்கு அதிகமாக பம்மல்..?

சங்கரன்கோவில் தேர்தலில் அதிமுகவின் வெற்றிச் செய்தி வெளிவந்த மறுநாள்(22-03-2012)வியாழன் அன்று நமது எம்ஜிஆரில் ஒரு விளம்பரம் வெளிவருகிறது.

அது இது தான்.


குமுதம் நிறுவனத்தின் லோகோவுடன் கோதை ஆச்சியின் விளம்பரத்தை நமது எம்ஜிஆர் நாளிதழ் வெளியிட்டதைக் கண்டு அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்த வரதராஜன் குமுதம் நிறுவனத்தின் சேர்மனாக நம்மைத் தமிழக முதல்வர் அங்கீகரிக்க வில்லையோ,நமது கனவு சாம்ராஜ்யம் நம்மை விட்டு விலகி விடுமோ என்று பதைபதைக்கிறார்.அதன் விளைவு தான் வழக்கத்திற்கு மாறாக நன்றியுணர்ச்சியுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வது.அதனை மிகவும் பகிரங்கப்படுத்துவது என ஊருக்கெல்லாம் சேதி சொல்கிறார்.

இவை அனைத்தும் வெளியில் தெரிந்த விஷயங்கள்.இது போக வெளியில் தெரியாத ஒரு விஷயமும் குமுதம் ஊழியர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.

வரதராஜன் என்ன தான் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் தமிழக முதல்வர் முற்றிலும் அவரை நம்பவில்லை.

ஏனென்றால் இதற்கு முன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலின்,கனிமொழி,அதன் பின் மன்னார்குடி குடும்பத்தின் பழக்கம் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் இன்று தன் பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்காக ஆளுந்தரப்பினை அண்டியிருக்கிறார்,அவர் யாருக்கும் நம்பிக்கை இல்லாதவர்,காரியம் முடிந்ததும் தன் துரோகப் புத்தியைக் காட்டுவார் என்றும் கருதுகிறார்கள்.

மேலும் குமுதம் வாசகர்களிடமிருந்து வரதராஜன் திரட்டிய தானே புயல் நிவாரண நிதியையும் நேரில் சந்தித்து தமிழக முதல்வரிடம் அளிக்க வேண்டும் என்ற வரதராஜன் கோரிக்கை இன்று வரைக்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், தொடர்பற்ற இன்னொரு செய்தி, குமுதம் பிரச்னையில் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இதுவும் வரதுவை பயத்திற்கு ஆளாக்கியுள்ளது. இது அனைத்தும் சேர்ந்து தான் குமுதம் இதழ் மூலம் பகிரங்கமாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் இக்கட்டான நிலையை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தானே உலக நியதி..!

ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.என்ன நடக்கிறது என்று...!

Monday 26 March 2012

புரோக்கர்கள்,கட்டப் பஞ்சாயத்து,வெட்டிப் பயல்களின் கூடாரமாகிப் போன சென்னை பிரஸ் கிளப்..!



கடந்த வியாழன்(22-03-2012) அன்று சென்னை பிரஸ் கிளப்பில் கூடங்குளம் அணூமின் நிலையத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்களை பத்திரிகையாளர் என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டுள்ள சிலரால் மிக மோசமாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.

அதனைப்பற்றிக் காண்பதற்கு முன் நடந்தவற்றைப் பார்ப்போம்.






ஞாநி பேச்சு முடித்து அதன் பின் அரங்கிலிருந்து வெளியேறிய பொழுது நடைபெற்ற அநாகரிக சம்பவங்கள் வீடியோவில் பதிவாகவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஞாநி தனது கருத்தினை அவரது முக நூலில் பதிவு செய்துள்ளார்.அது இது தான்.

//கூடங்குளம் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கூட்டமைப்பின் அறிக்கையை இன்று சென்னை பிரஸ் க்ளப்பில் நிருபர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் அருள் எழிலன் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கலந்துகொண்டு பேசிய எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.

முதலில் என் பேச்சை ஒட்டி வந்திருக்கக்கூடிய ஆதரவுக் குரல்களுக்கு நன்றி.

எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் கூட்டறிக்கையை ஊடகங்களுக்கு வெளியிடும் நிகழ்ச்சியில் பேசுவதற்கு என் முறை வந்தபோது, தி.மு.க, அதி.மு.க போன்ற கட்சிகள்தான் தங்கள் தலைவர்கள் கைதானால் உடனே  பஸ் எரிப்பு, கடை உடைப்பு என்று வன்முறையில் ஈடுபடுபவை; ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக 200 நாட்களுக்கு மேல் ஆயிரக்கணக்கான மக்கள் துளியும் வன்முறை இன்றி நடத்தி வரும் ஒரே போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான்; அந்த மக்கள் மீது முப்படைகளையும் ஏவிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லத் தொடங்கி, பெரியாரின் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் 144 தடை உத்தரவுக்கு எதிராகப் போராடிய வரலாற்றுடன் இடிந்தகரை போராட்டத்தை ஒப்பிட்டுச் சொன்னேன். போலீசை திரும்பப் பெற்று, அணு உலை வேலையை நிறுத்திவிட்டு, மீண்டும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் மக்கள் சார்பான விஞ்ஞானிகள் சொல்வது என்ன என்பதைக் கேட்கவும அரசுகள் முன்வரவேண்டும் என்று சொன்னேன்.

ஊடகங்கள் இதழியல் தொடர்பாக நான் சொன்ன கருத்துகள் மூன்று.

1. சுமார் 35 வருட காலமாக பத்திரிகையாளனாக இருந்துவரும் நான் இன்றைய நிலையை வேதனையுடன் குறிப்பிட விரும்புகிறேன். ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் விருப்பு வெறுப்புகள் இல்லாமல் உண்மை நிலையை  ஆராய்ந்து எழுதும்  செய்திகள் வராமல், அரசு  சார்பாகவே செய்தி வெளியிடுவது நியாயமா என்று பத்திரிகையாளர்கள் சிந்திக்க வேண்டும். இங்கே வந்திருக்கும் ஒவ்வொரு நிருபரும் கேமராமேனும் அலுவலகம் சென்றதும் தங்கள் தலைமை நிருபர், செய்தி ஆசிரியர்களிடம் இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டும். இதைச் செய்யும் முதுகெலும்பு இல்லாமல் எதற்கு இந்தப் பிழைப்பு ? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?

2. அணு உலை ஆரம்பிக்கப்படும் என்று அரசு அறிவித்ததும் உதயகுமார் தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு உலைக்குச் சென்று அதைத் தடுத்திருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் ஏன் உண்ணாவிரதம்  இருக்கிறார் என்று எழுதி தினமலர், தொடர்ந்து 200 நாட்களாக அறவழியில் துளியும் வன்முறை இன்றிப் போராடும்  உதயகுமாரையும் மக்களையும் வன்முறையில் ஈடுபட தூண்டும்விதத்தில் எழுதுகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தினமலர் செய்திருப்பது சட்டப்படி குற்றம் அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ( கைதட்டல்)

 3. இடிந்தகரைக்குள்ளே ஊடகங்களும் பத்திரிகைகளும் போகக்கூடாது, டி.விகளின் ஓபி வேன்கள் செல்லக்கூடாது என்றெல்லாம் போலீஸ் தடுத்தபோது, கருத்துச் சுதந்திரம் எங்கே போயிற்று ? அதை எதிர்த்திருக்க வேண்டாமா? ஏன் அதைக் கண்டித்து ஒரு பத்திரிகையாளர் அமைப்பும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை ? பிரஸ் கிளப் என்பது சீட்டாடவும் தண்ணியடிக்கவும் மட்டும்தானா?

இவற்றை நான் முதலில் பேசியபோது ஒரு சலசலப்பும் எழவில்லை. எனக்குப் பின் இன்னொரு எழுத்தாளர் பேசத்தொடங்கியபிறகு, ஒருவர் எழுந்து என் பேச்சு அவமரியாதையாக இருக்கிறது என்று எதிர்ப்பைத் தெரிவித்தார்.

எல்லா எழுத்தாளர்களும் பேசி முடித்ததும் கேள்வி பதில் சமயத்தில் நான் பதில் சொல்வேன் என்று எழிலன் அறிவித்தார். எல்லாரும் பேசி முடித்ததும் எழிலன் கூட்டம் முடிந்தது என்று அறிவித்ததும் முதலில் என்னை எதிர்த்தவரும் இன்னும் இருவரும் கேள்வி பதில் என்ன ஆயிற்று என்றார்கள். உடனே நான் என்னைக் கேள்வி கேட்டவருக்கு பதில் சொன்னேன்.

முதலில் சொன்னவற்றை திரும்பச் சொன்னேன். என் கருத்தில் எந்த அவமரியாதையும் இல்லை என்றேன்.

 35 வருட காலமாக இந்த துறையில் இருக்கும் நான் பத்திரிகைத் துறையின் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டவன். இருமுறை சென்னை நிருபர்கள் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளராக இருந்தவன். சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பத்திரிகை ஆசிரியருக்கு சிறை தண்டனை விதித்தபோது நான்தான் நிருபர் சங்க செயலாளராகக்  கண்டன இயக்கத்தை வழிநடத்தியவன். இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் தொடங்கியதற்காக என்னை வேலை நீக்கம் செய்தபோது அதை எதிர்த்து நான்கு வருடம் வழக்காடி ஜெயித்து மீண்டும் வேலைக்கு வந்து அதை உதறியவன். இப்போதும் நான் பத்திரிகையாளன்தான். எனக்கு இந்தத் துறை இயங்கும் விதம் பற்றி விமர்சிக்கும் முழு உரிமை உண்டு என்றேன்.

தலைமை நிருபர், செய்தி ஆசிரியர் சொல்லித்தான் உங்கள் நிகழ்ச்சிக்கெல்லாம் வருகிறோம். உங்களை பல ஊடகங்களில் அழைப்பவர்கள் அவர்கள்தான். அவர்களிடம் போய் குறையை சொல்லுங்கள் என்று ஒருவர் சொன்னார். எல்லா ஊடகங்களிலும் பெரிய பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தேவைப்படும்போது கூப்பிட்டு அவர்கள் செய்தி வெளியிடும்  முறை பற்றிய என் விமர்சனத்தை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். நேரில் பார்க்கும்போதும் சொல்கிறேன். இங்கே உங்களிடமும் சொல்கிறேன் என்றேன்

கூச்சல் எழுப்பிய மூவரும் தொடர்ந்து எதிர்த்தனர். உடனே விமர்சகர் அ.மார்க்ஸ் எழுந்து சமூகத்தில் மிகப்பெரிய மனித உரிமை மீறலும் மக்களுக்கெதிரான அராஜகமும் நடக்கும்போது அதைப் பற்றி ஊடகங்கள்  போதுமான தகவல்களை  வெளியிடாத வருத்தத்தில் வேதனையில் பேசப்பட்ட பேச்சு என்றும் அது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் சொன்னார்.  நிருபர்கள் செய்தி கொடுத்தால் கூட முத்லாளிகளும் நிர்வாகங்களும் விரும்புபவைதான் வெளியாகும் என்பதை தாங்கள் அறிவோம் என்றும் சொன்னார்.

கூச்சலிட்ட ஒருவர் நான் என் கருத்தை வாபஸ் வாங்கவேண்டுமென்றார். மன்னிப்பு கேட்கவேண்டுமென்றார். நான் முடியாது என்று மறுத்தேன். உடனே எல்லாரும் வெளியே போங்கள். மேடையில் ஒருவரும் இருக்கக்கூடாது எல்லாரும் பிரஸ் க்ளப்பை விட்டு வெளியே செல்லுங்கள் என்று இருவர் கத்த ஆரம்பித்தனர். நான் இறங்கி வெளியே போய்விட்டேன்,

அரங்கிலிருந்து வெளியேறி வராந்தாவைக் கடக்கும்போது ஒருவர், ஞாநியைப் பிடி. கதவைப் பூட்டு. அடி அவனை என்றார். நான் திரும்பிப் பார்த்து, அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று சொன்னபடி எந்தப் பதட்டமும் இல்லாமல் நடந்து வெளியே போய் சாலையில் இருந்த நண்பர் வண்டியில் ஏறி எழும்பூர் தாயகம் அலுவலக வளாகத்தில் கூடங்குளம் மக்கள் மீதான முற்றுகையைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த பெண் எழுத்தாளர்களை வாழ்த்திப் பேசப் போய்விட்டேன்.



சேப்பாக்கம் பிரஸ் க்ளப்பிலிருந்து எழும்பூர் சென்று சேர்வதற்குள் பல பத்திரிகையாளர்கள் போன் செய்தார்கள். எல்லாரும் பிரஸ் க்ளப்பில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்தான். எதிர்ப்புக் குரல் எழுப்பிய நால்வரில் இருவர் போலி பத்திரிகையாளர்கள் என்றும் க்ளப் வளாகத்தில் எப்போதும் திரிந்தபடி சீட்டாட்டம், குடித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவோர் என்றும் நடந்த சலசலப்புக்கு தாங்கள் என்னிடம்  வருத்தம் தெரிவிப்பதாகவும் அந்த ஆறு அசல் பத்திரிகையாளர்களும் சொன்னார்கள்.

சென்னை பிரஸ் க்ளப், சென்னை நிருபர்கள் சங்கம் இன்னும் ஓரிரு பத்திரிகையாளர் அமைப்புகளில் எல்லாம் தேர்தல் நடக்காமலே பத்தாண்டுகளுக்கு மேல் கழிந்திருக்கின்றன. அந்த சமயங்களில் இவற்றின் நிர்வாகிகளாக இருநதவர்கள் தார்மிக உரிமை மட்டுமன்றி எந்த சட்ட உரிமையின் கீழ் பதவிகளில் இருந்தார்கள் என்பதே கேள்விக்குறி.

நேர்மையான, உண்மையான பல பத்திரிகையாளர்கள் இந்த நிலையை மாற்ற சக்தி இல்லாமலும் நமக்கேன் வம்பு என்றும் ஒதுங்கி நிற்கிறார்கள்.

இத்தகைய சூழலில் சில போலிகள், அரசு, காவல் துறையின் ஒற்றர்கள் பத்திரிகையாளர் போர்வையில் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அரசியல்வாதிகள்,  அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் நேர்மையை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் துறையில் நடக்கும் அநீதிகள் அக்கிரமங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அதில் ஒரு சிறு துளியை இன்று நான் பத்திரிகையாளர்கள் முன்பே பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதே சலசலப்புக்குக் காரணம். இதை எழுதும் இரவு நேரம் வரையிலும் எனக்கு தொடர்ந்து வரும் எண்ணற்ற ஊடக பத்திரிகைத் துறை நண்பர்களின் போன் உரையாடல்கள் இந்த துறையில் சீரழிவு எவ்வளவு ஆழமாகப் போய்விட்டது என்பதையும், அது குறித்து உள்ளுக்குள்ளேயே வெதும்பிக் கொண்டிருப்போர் எண்ணிக்கைதான் அதிகம் என்பதையும் எனக்குக் காட்டுகின்றன.

இன்றைய நிகழ்வு பற்றிய என் ஒரே வருத்தம், அ.மார்க்ஸ், எழிலன் போன்றோருக்கு தர்மசங்கடம் ஏற்பட நேர்ந்தது பற்றி மட்டும்தான். என் நிமித்தம் வருத்தம் தெரிவிக்க நேர்ந்த மார்க்ஸிடமும் எழிலனிடமும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். (முற்றும்)//

ஞாநியின் கருத்து இப்படி நேர்மையுடனும் வெளிப்படையுடனும் இருக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொருளாளர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு திரியும் அண்டப்புளுகு அன்புவின் அறிக்கையைப் பார்ப்போம்.//

                பத்திரிகையாளர் ஞானி தப்பி ஓட்டம்.

கூடுங்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவாக, எதிராக பல அமைப்புகள், தனி நபர்கள் நிதி கொடுக்கும் அமைப்புகளின் பின்னணியில் களத்தில் இறங்கி அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்..


         கூடுங்குளம் எதிர்ப்பு போரட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு ஆதரவாக மார்க்ஸ் தலைமையில் ஒரு குழுவினர் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் மீடியாக்களின் ஹிரோவாக வெளிகாட்டி வருகிறார்கள்.


  இதன் உச்சகட்டமாக தமிழக அரசு கூடங்குளத்தில் அணு மின்நிலையம் தொடங்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்தப்பின்பு,  அருள் எழிலன் என்பவர் மார்க்ஸ், பத்திரிகையாளர் என்ற பெயரில் பொழப்பு நடத்தும் ஞானி இவர்களை வைத்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று(22.3.12) 11மணிக்கு படைப்பாளிகள், எழுத்தாளர்கள் கூடுங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.   

 அந்த கூட்டத்தில் புதிய தலைமுறை டிவி வந்த பிறகு, அந்த டிவியில் பத்திரிகையாளர் என்ற போர்வையில் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு, கண்ணாபிண்ணா என்று, சமுதாயத்திற்கு எதிராக கருத்துக்களை அள்ளிவீசும் ஞானி பேசும் போது கூடுங்குளம் பிரச்சனைப்பற்றி பேசாமல், பத்திரிகையாளர் மன்றத்தின் செயல்பாடுகளையும், உறுப்பினராக உள்ள   பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக தாக்கி பேசினார். தினமலர் நாளிதழை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.
         
 இதனால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள், ஞானி பேச்சை நிறுத்தும்படி கூறினார், நான் அடியாட்கள் வைத்து உங்களை உதைப்பேன் என்று இன்னும் ஆவேசமாக தொடர்ந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தையும், தினமலர் நாளிதழைப்பற்றியும் மிகவும் மோசமாக பேச பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்கள் ஞானிக்கு எதிராக திரண்டு எதிர்ப்பு தெரிவித்து, விரட்டி அடித்தார்கள்...ஞானி தப்பி ஒடினார்...


  பத்திரிகையாளர் என்ற பெயரில் பொழப்பு நடத்தும் ஞானிக்கு தமிழக அரசின் செயல்பாடுகளைப்பற்றியோ, தமிழ்நாட்டின் நிலைப்பற்றியோ, தமிழக மக்களின் வாழ்வதாரங்களை பற்றியோ ஒரு மண்ணும் தெரியாது...


  தரக்குறைவாக, மிக மோசமாக சில பத்திரிகைகளில் எப்போதாது எழுதுவார். அவ்வளதான். இவரை மிகப்பெரிய அறிவாளி, மூத்த பத்திரிகையாளர் என்று சரித்திரம், புதுமை படைப்பதாக கூறும் அறிவாளிகள் நிறைந்த புதிய தலைமுறை டிவி நிர்வாகம் இப்படிப்பட்டவர்கள் அறிமுகப்படுத்தி, வளர்த்துவிட்டு நிகழ்ச்சிகளில் பேசவிட்டு தமிழ் சமுதாயத்தை சீரழிக்கிறது..


  ஞானி விரட்டியடிக்கப்பட்ட பிறகாவது இவரைப்போன்றவர்களை புதிய தலைமைமுறை டிவி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல், திறமையானவர்கள் ஊக்குப்படுத்துவார்களா?///
இது தான் மக்கள் செய்தி மையம் என்ற பெயரில் அன்பு வெளியிட்ட அறிக்கை.அன்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும்,எழுதிய முறையும்,எழுத்துப்பிழைகளும் அவரது தரத்தை உணர்த்தும்.ஆனால் நம்புங்கள் அவர் தான் பாரம்பரியமிக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொருளாளர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்.

அன்புவைப் பற்றி நமது வாசகர்களுக்கு நன்கு தெரியும்.இவரைப்பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள நமது முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

http://kalakakkural.blogspot.in/2011/09/blog-post_595.html
http://kalakakkural.blogspot.in/2011/10/blog-post_31.html
http://kalakakkural.blogspot.in/2011/09/blog-post_27.html

இவரது கருத்து இப்படி இருக்க சென்னை பிரஸ் கிளப்பின் இணைச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமாள் என்னும் பாரதி தமிழனோ சம்பவம் நடைபெறும் பொழுது மன்றத்திற்கு வந்து தவறு செய்தவர்களைக் கண்டிக்காமல் கூட்டம் நடத்தியவர்களைச் சமாதானப் படுத்தி விட்டார்.காறணம் அந்த வெட்டிக் கும்பலின் பலத்தில் தான் இவர் தொடர்ந்து தேர்தல் நடத்தாமல் இணைச் செயலாளராக நீடித்துக் கொண்டிருக்கிறார்.

இனி செய்திக்கு வருவோம்.

பிரஸ் கிளப்பில் ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு இந்த அவமானம் எப்படி நிகழ்ந்தது?
இதற்கு என்ன காரணம்?என்று அறிவதற்கு முன்னால் பிரஸ் கிளப் இன்று யார் கைப்பிடியில் யார் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இப்பொழுது இது மோசடிக் கும்பலின் பிடியில் இருக்கிறது.

ஊர் உலக அரசியல் நியாய அநியாயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள் அங்கம் வகிக்கும் சென்னை பிரஸ் கிளப்பிற்கு கடந்த பத்தாண்டுகளாகத் தேர்தலே நடக்கவில்லை என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

அதற்கு என்ன காரணம்?யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது இந்தப் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

டைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டில் தான் சென்னை பிரஸ் கிளப்பிற்குத் தேர்தல் நடந்திருக்க வேண்டும்.அப்பொழுது பொதுச்செயலாளராக இருந்தவர் சிவக்குமார் என்பவர்.இவர் தி ஹிந்து நாளிதழில் அப்பொழுது கிரைம் பீட் பார்த்து வந்தார்.இவரின் பணி என்னவென்றால் குற்றங்களைத் துப்பறிந்து குற்றவாளிகளை வெளியுலகுக்கு அடையாளம் காட்டுவது.ஆனால் இவரே ஒரு குற்றவாளி என்பது தான் கசப்பான உண்மை.

                                                        சிவகுமார்

பெரும்பாலான நேரங்களில் இவர் காவல்துறையிடம் சிக்கும் குற்றவாளிகளை தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் காப்பாற்றி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பார்த்தார்.இவரின் இந்த செயலுக்கு ஒத்துவராத காவல்துறை அதிகாரிகளை தி ஹிந்து நாளிதழில் மிக மோசமாக எழுதி வந்தார்.இதற்குப் பயந்து கொண்டு இவருக்கு உடந்தையான திகாரிகல் இருந்தாலும் நேர்மையான அதிகாரிகல் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

அப்பொழுது சென்னை காவல்துறை ஆணையாளராக இருந்த விஜயகுமார் இவர் மீது கடும் கோபத்தில் இருந்தார்.இந்த சூழ்நிலையில் இவருக்கு அப்பொழுது நெருக்கமாக இருந்த திலகவதி ஐபிஎஸ் அவர்களை சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளராக நியமிக்க இருப்பதாக ஒரு செய்தியை தி ஹிந்து நாளிதழிலும் இவரது கூட்டாளிகளாக இருந்த தினமலர் குபேந்திரன் மற்றும் ஒரு சிலரிடம் சொல்லி அவர்கள் பணியாற்றும் பத்திரிகைகளிலும் செய்தியை வரவழைத்து விட்டார்.


இந்தச் செய்தியால் கோபமடைந்த விஜயகுமார் தனக்கு கீழ் பணியாற்றும் அத்தனை காவல்துறை அதிகாரிகளிடமும் சிவகுமார் என்பவர் என்னென்ன ஆப்ளிகேஷன் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார் என்ற தகவல் முழுவதையும் கேட்டு வாங்கினார்.அந்தத் தகவலை அப்படியே அன்றைய தி ஹிந்து நிர்வாகப் பொறுப்பில் இருந்த என்.ரவிக்கு கிடைக்கும் படி செய்து விட்டார்.அதற்குப் பின்.ரவி.சிவகுமாரை உடனடியாக வேலையில் இருந்து ராஜினாமா செய்யும் படி உத்தரவிட்டார்.அப்பொழுது தான் சிவகுமாரின் மோசடி வேலைகள் தி ஹிந்து ஊழியர்கள் மற்றும் பத்திரிகை உலகுக்கே தெரிய வந்தது.(தினமல்ர் குபேந்திரனுக்கும் இதையொட்டி பிரச்ச்னை ஏற்பட்டது.அப்பொழுது அவரை எச்சரித்த நிர்வாகம் அதன்பின் சில காலத்தில் அவரை நீக்கம் செய்தது)

தி ஹிந்து நாளிதழில் இருந்து சிவகுமார் ராஜினாமா செய்தவுடன் அவரைக் கைது செய்ய காவல்துறை தயாராக இருந்தது.இதைத் தெரிந்து கொண்ட சிவகுமார் தன் மனைவி குழந்தைகளுடன் தி ஹிந்து அலுவலகத்திற்கு வந்து ரவியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.மன்னிக்க மறுத்த ரவி என்.ராமைச் சென்று பார்க்கும் படி கூறி விட்டார்.ராமின் காலிலும் குடும்பத்துடன் விழுந்தார்.அதன் பிறகு தி ஹிந்து நாளிதழின் இணையப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.அதற்குப் பிறகுஅலுவலக நேரம் மற்ற நேரங்களில் ராம் எங்கு சென்றாலும் அவருக்கு பெட்டி தூக்கும் பணியை சிவகுமார் செய்து வந்தார்.
-------

 மோசடி வேலைகள் வெளியுலகுக்குத் தெரிந்த இந்த சூழ்நிலையில் பிரஸ் கிளப் தேர்தல் நடந்தால் அதில் கட்டாயம் மண்ணைக் கவ்வி விடுவோம் என்ற பயம் ஒரு பக்கமும் தி ஹிந்து வில் இருந்து வெளியேற்றி விட்டால் பிரஸ் கிளப் செயலாளர் என்ற பொறுப்புத் தன்னைக் காவல்துறையின் கைதில் இருந்து காப்பாற்றும் என்ற எண்ணத்திலும் தேர்தல் நடத்துவதை சிவகுமார் தள்ளிப் போட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தி ஹிந்துவில் கல்வி நிருபராக இருந்த கே.ராமச்சந்திரன் தினமணியில் கல்வி நிருபராகப் பணியாற்றியவரும் பிரஸ் கிளப்பில் தலைவராக இருந்த வருமான இருந்த பொன் தனசெகரன் இருவரும் சென்னை பிரஸ் கிளப்புக்கு நன்கொடையில் எஸ் ஆர்.எம்.நிறுவனம சார்பில் கட்டிடம் கட்டித் தருமாறு எஸ் ஆர்.எம்.கல்லூரியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பொன்னவைக்கோ வைச் சந்தித்து கோரிக்கை வைக்கின்றனர்.இவர்களது கோரிக்கை பச்சமுத்துவிடம் சொல்லி ஒப்புதல் பெறப்படுகிறது.

இது குறித்து பொன் தனசேகர் சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகளிடம் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கிறார்.இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் தலைவர் பொன்.தனசேகருக்குத் தெரியாமலே பச்சமுத்துவை நேரில் சந்தித்து உறவைப் பலப்படுத்தி அதன் பின் கட்டிடம் கட்ட்த் தொடங்கும் முன்னே பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகிறார்.

இதனால் மனம் உடைந்த பொன்.தனசேகர் கட்டிடம் கட்டுவதற்கு முன்பே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்துகிறார்.ஆனால் அவரது கோரிக்கை செவி சாய்க்கப் படவில்லை.இதன் பிறகு ஒரு கட்டத்தில் இனியும் பிரஸ்கிளப் தலைவர் பதவியில் தொடர்ந்தால் சிவகுமார் செய்யும் தில்லுமுல்லுவால் தனது பெயருக்கும் களங்கம் வந்துவிடுமோ என்ற பாய்த்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார்.அந்த ராஜினாமா கடிதத்தில் தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இவரது ராஜினாமா சிவகுமாருக்கு வசதியாகிப் போனது.இதைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஒவ்வொருவராகத் தாங்களாக விலகிக் கொண்டனர்.இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிவகுமார் மற்ற பத்திரிகைகளில் கிரைம் பீட் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் மோசடி வேலையில் ஈடுபடும் நபர்களையும் காலியாகவுள்ள நிர்வாகக் குழுப் பொறுப்புக்கு யாரையும் கேட்காமல் நியமனம் செய்தார்.

இவரால் நியமிக்கப் பட்டவர்கள் யார் என்றால் கோசல்ராம்.குபேந்திரன்,ரஜினிகாந்த்(அன்புவின் எடுபிடி),அன்பழகன் என்ற அன்பு.பெருமாள் என்கின்ற பாரதி தமிழன்,அசதுல்லா,இப்படி ஒட்டு மொத்தமாக தனக்கு வேண்டியவர்கள் மற்றும் தனது கட்டப் பஞ்சாயத்துக்கு உடந்தையாக இருந்தவர்களையெல்லாம் நிர்வாகிகளாக ஆக்கிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

                                                       பெருமாள் என்கிற பாரதி தமிழன்
                                             அண்டப்புளுகன் அன்பு

அப்பொழுது இணைச்செயலாளர் பொறுப்புக்கு பெருமாள் என்ற பாரதி தமிழன் என்பவரையும் பொருளாளர் பொறுப்புக்கு அன்பு என்கின்ற அன்பழகனையும் நியமித்தார்.மற்றவர்கள் நிர்வாக குழு பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

                                                 குலேந்திரன்
                                                 ரஜினிகாந்த்
                                                   கோசல்ராம்
                                                  அசதுல்லா

இவ்வாறு சிவகுமார் அனைவருக்கும் பொறுப்புக்களை வாரி வழங்கினார்.சிவக்குமார் பாரதி தமிழனுக்கு இணைச் செயலாளர் பதவியை வழங்கினார்.

சிவகுமாருக்கும் பெருமாளுக்கும் ஏற்பட்ட ஆழமான நட்புக்கான பின்னணி சுவாரசியமானது.

அப்பொழுது தனியார் வானொலி ஒன்றில் கோழிக்கறி விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் இருவர் பேசிக்கொண்ட டயலாக் இது தான்.

நம்ம கோழிக்கறியை எப்படி பிரபலமாக்குறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்.”

அதுக்கு இன்னொருவர்,”இதுக்கு எதுக்கு மெனக்கிடனும்.ரொம்ப சிம்பிள்பா.யாராவது இரண்டு பிரஸ்காரங்களக் குப்பிட்டு கையில் கவர் கொடுத்தாப் போதும்பா.நம்ம எப்படி எதிர்பார்க்கிறோமோ அப்படி புகழ்ந்து எழுதிடுவாங்க.அப்புறம் வியாபாரம் பிச்சிக்கும்.”

இந்த விளம்பரம் ஒளிபரப்பான உடன் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.அனைவரும் ஒன்று கூடி வானொலிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.வானொலி உடனே விளம்பரத்தை நிறுத்தியது.மேலும் மும்பை விளம்பர நிறுவனத்தின் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.அவர்களுடன் பேசிய நேர்மையான பத்திரிகையாளர்கள் மன்னிப்புக் கேட்காவிட்டால் உங்கள் மீது வழக்குத் தொடருவோம் என்று எச்சரிக்க நிறுவனம் உடனே இது குறித்துப் பேச மும்பையிலிருந்து தனது பிரதிநிதிகளை சென்னை பிரஸ் கிளப்புக்கு அனுப்பியது.மும்பை நிறுவனப்பிரதிநிதிகளும் சென்னை பிரஸ் கிளப் வந்தனர்.


ஆனால் இவர்கள் வருகை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவர்களுடன் பெருமாளும் சிவகுமாரும் மட்டும் தனியாகப் பேசி அனுப்பி விட்டனர்.அவர்கள் சென்ற பின் தான் அவர்கள் சென்னை வந்து சென்ற விஷயமே பிற பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்தது.


மும்பை நிறுவனத்திடம் மன்னிப்புக் கடிதம் வாங்கினீர்களா? என்று அனைவரும் பிரஸ் கிளப்பில் பெருமாளிடமும் சிவகுமாரிடமும் கேட்க,அவங்க மன்னிப்புக் கேட்டாங்க,ஆனா எழுத்துப் பூர்வமாக் கடிதம் கொடுக்கல.அதுக்குப் பதிலா டிவியும் டெக்கும் கொடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க.ஈவினிங் வந்துடும்ன்னு சொல்ல,பத்திரிகையாளர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்றனர்.

கிராமத்துல செருப்பால அடிச்சுட்டு அதுக்குப் பரிகாரமா காசு கொடுத்து சமரசமாப் போற மாதிரி,நம்மளக் கேவலமாப் பேசுன கம்பெனிக்காரன்ட்ட டிவியும் டெக்கும் வாங்கிட்டு அனுப்பிட்டீங்களே..நீங்கள்ளாம் என்ன பத்திரிகைக்காரங்க.உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா,சோத்துல உப்பு போட்டுத் திங்குறீங்களா,இல்லை வேறு எதும் திங்குறீங்களா..என்று ஆவேசப்பட்டனர்.

ஆனால் சிவகுமாரும் பெருமாளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்தனர். இதன் பிறகு தான் இருவரும் நகமும் சதையுமாக மாறினர்.

இப்பொழுது நீங்கள் சென்னை பிரஸ் கிளப் உள்ளே சென்றவுடன் வலது பக்கம் வரவேற்கிறதே அந்த டிவியும் டெக்கும் அது யார் வாங்கிக் கொடுத்தது தெரியுமா?ரிப்போர்ட்டர் எல்லாம் கவர் வாங்குறவங்க என்று கேவலமாகச் சொன்ன மும்பை விளம்பர நிறுவனம் வாங்கிக் கொடுத்தது தான்.இப்பொழுது அதில் தான் அனைவரும் நாள்தோறும் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

(மும்பை நிறுவனம் அவதூறு சொன்னதுக்கு லஞ்சமாக டிவியை வாங்கிக் கொண்டு ஆத்திரப்படாதவர்கள்,’அர்த்தத்துடன்’ அமைதி காத்தவர்கள் சக பத்திரிகையாளரும் முன்னோடியுமான ஞாநியின் முகத்துக்கு நேரான,உண்மையான விமர்சனத்தைக் கண்டு ஆவேசமடைந்து ஞாநியை வெளியேறச் சொன்னார்கள்.

அவ்வாறு ஞாநியை வெளியேறச் சொன்னவர்களிடம் மேடையில் இருந்தவர்கள் ஞாநியின் ஜோல்னாப்பையில் தான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கவர் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் ஞாநி அவர்களை இரண்டு அடி அடித்திருந்தாலும் வாங்கிக்கொண்டு கவரையும் கேட்டு வாங்கியிருப்பார்கள்.ஞாநியை சகல மரியாதையுடன் வழியனுப்பி வைத்திருப்பார்கள்.)

இது தான் சென்னை பிரஸ் கிளப் திசை மாறிய கதை.சிவக்குமாரும் அவரது அடிவருடிகளும் முழுமையாகத் தங்கள் கைப்பிடிக்குள் பிரஸ் கிளப்பைக் கொண்டு வந்த பிறகு தான் சென்னை பிரஸ் கிளப் கட்டப் பஞ்சாயத்து கூடாரமாகவும் சூதாடிகளின் இருப்பிடமாகவும் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் புரோக்கர்கள் கூடும் இடமாகவும் மாறிப் போனது.அதன் பின் இன்று வரை 10 வருடங்களாக‌ தேர்தலே நடக்க வில்லை.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

இது பற்றி யாரேனும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் அந்த உறுப்பினரைப் பற்றி அவர் பணியாற்றும் நிர்வாகத்துக்கு மொட்டை பெட்டிஷன் அனுப்பியும் அனாமதேய கால் செய்தும் அவரைப் பிரஸ் கிளப்புக்கு வரவிடாமல் செய்து விடுவார்கள்.இதனால் நாளுக்கு நாள் போலி பத்திரிகையாளர்கள் மொய்க்கும் இடமாகவும் உண்மையான பத்திரிகையாளர்கள் வெறுக்கும் இடமாகவும் சென்னை பிரஸ் கிளப் மாறிப்போனது.

இவ்வாறு பெருமாள் உட்பட அனைவரையும் பொறுப்பில் சட்டவிரோதமாக நியமித்த சிவகுமார் கொஞ்சகாலத்தில்ஆஸ்திரேலியா பறந்து விட்டார்.செல்லும் முன் தன்னைப் போல் இதற்கு தகுதியான தன்னுடைய கூட்டாளி என்று கருதி பெருமாள் என்கிற பாரதி தமிழன் வசம் ஒப்படைத்துச் சென்று விட்டார்.

ஆனால் இன்று வரை பிரஸ் கிளப்பில் கொடுக்கப்படும் அடையாள அட்டையில் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் சிவகுமார் கையொப்பம் தான் இருக்கும்.ஆனால் அவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லை.ஆனால் இவர் தான் பாரம்பரியமிக்க சென்னை பிரஸ் கிளப்பின் பொதுச் செயலாளர்.

இது தான் பிரச் கிளப் திசைமாறிய கதை..!

இவ்வாறு கட்டப்பஞ்சாயத்துக் கும்பலும் குடிகாரர்களும் புரோக்கர்களும் சென்னை பிரஸ் கிளப்பை மொய்த்திருப்பதால்  தான் பத்திரிகை தொழிலை மட்டுமே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஞாநியை பிளாக்மெயில் கும்பலும் கட்டப்பஞ்சாயத்து கும்பலும் நீ யார் பிரஸ் கிளப் பை பற்றி விமர்சிக்க?என்று கேள்வி கேட்டு அவரைத் தாக்க முயலும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனிக்களுக்கும் மலத்தில் மொய்க்கும் ஈக்கும் வித்தியாசம் உள்ளது.தேனீக்கள் உழைத்து வாழ்பவை.ஆனால் மலத்தை மொய்க்கும் ஈ அப்படியல்ல.பிழைப்புக்காக எதையும் செய்யது துணிபவை.

உண்மையான உழைக்கும் பத்திரிகையாளர்கள் மட்டும் கூடும் இடமாக இருந்திருந்தால் ஞாநியின் கருத்துக்கு உடன் பட்டிருப்பர் அல்லது ஆரோக்கியமாக எதிர்விவாதம் செய்திருப்பர்.ஞாநியை விரட்டிய கும்பலில் பெரும்பான்மையினர் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பிரஸ் கிளப்பை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் கூட்டமாகும்.அதனால் தான் ஞாநியின் கருத்து ஒரு பிரச்சனையாக உருவெடுத்து எங்கே தங்களின் கழிசடைப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் மேற்கொண்டு அவரைப் பேச விடாமல் கிளப்பை விட்டு வெளியேறும் படி நிர்ப்பந்தித்துள்ளனர்.வெளியேறாவிட்டால் தாக்குவோம் என்று கூறியுள்ளனர்.(ஆனால் ஞாநி பயப்படாமல் பதிலுக்கு எச்சரித்துள்ளார்)

அதிமுக,திமுக போன்ற கட்சிகளில் கூட உரிய காலத்தில் பெயரளவுக்காவது தேர்தல் நடத்துகின்றார்களே..ஆனால் உலகத்துக்கே அறம் போதிக்கும் பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் இல்லாமல் சீரழிந்து கிடக்கிறதே..?இந்த நிலை எப்பொழுது மாறும்.?

டாடா,மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கூட உரிய காலத்தில் தேர்தல் நடத்துகின்றார்களே..!

ஆனால் உழைக்கும் பத்திரிகையாளர்கள் அங்கம் வகிக்கும் சென்னை பிரஸ் கிளப் தேர்தல் நடத்தாமல்,கணக்கு வழக்குகள் பராமரிக்காமல்கடந்த 10 வருடங்களாக  நாறிப்போய்க்கிடக்கிறதே..?

அது ஏன்..? இந்த இழிநிலை எப்பொழுது மாறும்..?

பாரதியார் மீது உள்ள பற்றால் தன்னைப் பெற்று,வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தை வைத்த இறைவனின் பெயரான பெருமாள் என்ற பெயரையே தூக்கி எறிந்து விட்டு பாரதி தமிழன் என்று சூட்டிக் கொண்ட பெருமாள் சார்,நீங்கள் தான் சென்னை பிரஸ் கிளப் இணைச் செயலாளர் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சென்னை பிரஸ் கிளப்பை ஒரு கும்பல் உங்கள் தலைமையில் தான் சீரழித்துக் கொண்டிருக்கிறது...

இந்த நிலையை மாற்ற முயற்சிப்பீர்களா..?

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ !
சொல்லடி சிவசக்தி என்னை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமைதாராயோ இந்த மா நிலம் பயனுற வாழ்வதற்கு
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..”

----பாரதியார் கவிதைகள்

பாரதி கவிதையைப் படித்து விட்டு பாரதி தமிழன் என்று பெயர் மாற்றினால் மட்டும் போதாது.

அதன் படி நடக்க முயற்சிப்பீர்களா.?

அத்தியாயம் 1 நிறைவு பெறுகிறது.அடுத்த பகுதி அதி விரைவில்...!



Friday 23 March 2012

”மதுவோடு மயிலாட”-குமுதம் குழுவினரின் போதை ட்ரிப்...!காறித் துப்பும் கொடைக்கானல் நரிக்குறவர்!

                                                 குமுதம் சினிமா நிருபர் தேவிமணி,ரிப்போர்ட்டர் செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸ்,குமுதம் பக்தி பொறுப்பாசிரியர் ஜெயப்பிரியன்,மணிவண்ணன்,(ஞாயிறு 18-03-2012 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்)


                                                       வெள்ளிக்கிழமை (16-03-2012)கொடைக்கானல் மலையில் பேருந்து செல்லும் பொழுதுஎடுக்கப்பட்ட புகைப்படம்.


சென்ற வார குமுதத்தில் ‘நாங்கலாம் ரூம் போட்டு யோசிக்க கொடைக்கானல் போறோம்ல’ என்ற கமெண்ட்டைப் படித்து ஆஹா குமுதத்தை புத்துணர்வுடன் கொண்டு வர ஆலோசித்திருக்கிறார்கள் போல என்று நினைக்கும் அப்பாவி வாசகர்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பதைச் சொல்லும் லைவ் ரிப்போர்ட் இது.

“கொடைக்கானல் ட்ரிப்னதும் எல்லோருக்குமே பயமாயிடுச்சு. ஏன்னா இது குமுதம் கம்பெனிய ஆட்டையப் போட்ட வரதராஜன் கூட்டிட்டுப் போற ட்ரிப். மலைப் பிரதேசம் வேற. ஏதாவது ஏடாகூடம் பண்ணிடுவாங்களோனு எல்லோருக்கும் பயம். அது வேற இல்லாம் செய்தி ஆசிரியர் ஜான் சார் (அவர் தாங்க டப்பா சோறு) இங்கதான் கொலை வழக்குல மாட்டுனாரு. இப்படி பீதியைக் கிளப்புற விஷயம் இருந்துதான நிறைய பேரு பேக் அடிச்சாங்க. வராதவங்களுக்கு நாலு நாள் சம்பளம் கட், அப்புறம் அவங்க டாக்டர் ஜவஹர் ஆளுன்னு முத்திரைக் குத்தப்பட்டு குடிக்க தண்ணிகூட ஆபிஸ்ல தர மாட்டோம்னு மிரட்டுனதும் எல்லோரும் கிளம்பியாச்சு.

வெள்ளிக்கிழமை காலைல (16-03-2012)ஆறு மணிக்கு புரசைவாக்கம் குமுதம் ஆபீசுக்கு வரச் சொன்னாங்க. ரெண்டு பஸ்.  அங்கேயே டீமை ரெண்டா பிரிச்சுட்டாங்க. தண்ணியடிக்கிறவங்க ஒரு பஸ், அடிக்காதவங்க இன்னொரு பஸ்னு. குமுதம் பத்திரிகையாளர்கள்தான் நல்ல குடிமகன்களாச்சே, தண்ணியடிக்கிற பஸ் நிரம்பி வழிய, அடுத்த பஸ்ல பண்ணிரெண்டு பேர்தான். அந்த பஸ் சீக்கிரம் கிளம்பிடுச்சு. குடிகார பஸ் சைட் டிஷ்லாம் வாங்கிட்டு கிளம்ப ஏழரை மணியாயிடுச்சு.  ஜான் சார்தான் சரக்கு ஏற்பாடு பண்ணார்னு அவரோட சிஷ்யகோடிகள் எல்லோரிடமும் ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தார்கள். ( ஆனா உண்மைல கீழப்பாக்க போலீஸ் அதிகாரி ஒருத்தர் உபயமாம் சரக்கு) முதல் பாட்டில் ஒப்பன் பண்ணும் போது காலைல எட்டு மணி. ‘அட குடிகாரப் பசங்களா’னு சொல்றீங்க. கரெக்ட். குடிகாரப் பசங்கதான். பஸ் செங்கல்பட்டு தாண்டுறதுக்குள்ள நாலஞ்சு ஃபுல் ஓடிடுச்சு. வெறும் வயித்துல ஏசி பஸ்ல தண்ணியடிக்க தண்ணியடிக்க எல்லோருக்கும் எல்லா பாஷையும் வர ஆரம்பிச்சுடுச்சு.

செங்கல்பட்டு தாண்டுனதும்தான் அந்த அசிங்கம் நடந்துச்சு. ஒரு லே அவுட் ஆர்டிஸ்ட் தான் சாப்பிட்டதை விளம்பர இலாகா மானேஜர் மீது வாந்தி எடுக்க...சீய்... அவர் என்ன செய்ய என்று அலற... குடிமகன்கள் ‘ அதெல்லாம் ஒண்ணுமில்ல’னு சமாதானம் கூற...இன்னொருவர் குபுக். ஏசி பஸ்ஸில் வாந்தி வாடை தூக்க ஆரம்பித்தது. ஜான் சார் மட்டும் ‘ ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல’னு எல்லோரையும் அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்த பஸ்ஸில் ஏறிவிட வேண்டும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பிரச்சனை. எங்களுக்கு முன்னால் போன பஸ் பஞ்சராகி வழியில் நின்றுக் கொண்டிருந்தது. அதில் கொஞ்ச பேர் ஏறி ரெண்டு பஸ்ஸையும் குடிகார பஸ்ஸாக மாற்றி சமநிலை சமுதாயமாக மாற்றினர். கொடைக்கானல் வரைக்கும் வாந்தி நாத்ததுலதான் பயணம்.

இப்படியே குடியும் கூத்துமாய் பஸ் கொடைக்கானல் சென்று சேர்ந்தது. அங்கு சபரி ஓட்டலில்தான் ரூம். ‘ ஒரு ரூம் ஐயாயிரம் ரூபாய் எல்லாம் நம்ம தலைவர் உங்களுக்காக் ஸ்பெஷலா ஏற்பாடு பண்ணது’ என்று குழும ஆசிரியர் கோசல்ராம் விசுவாசமாய் சொன்னார். ‘கம்பெனிய ஆட்டய போட்ட துட்டுதானே’ போதையில் சொன்ன நிருபரின் வார்த்தைகள் அவர் காதில் விழவில்லை.

                                                 சபரி ஓட்டல்

அறைக்குள் போனதுமே எல்லோர் கையிலும் ஒரு பேப்பர் திணிக்கப்பட்டது. அதில் ஐந்து நிபந்தனைகள். ரூமில் மது அருந்தக் கூடாது, சேர்மன் மீட்டிங்கில் செல்போன் எடுத்து வரக் கூடாது, அறைகளை மாற்றக் கூடாது, ஒட்டல் பொருட்களை உடைத்தால் அபராதம், சண்டை போடக்கூடாது...இப்படி நிபந்தனைகள். தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு போட்ட இந்த நிபந்தனைகளை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. பரவாயில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போகுது.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் எல்லோரும் குடித்தார்களே செய்தி ஆசிரியர் ஜான் சாரும் குழும ஆசிரியர் கோசல் ச்சாரும் ( ச் போட்டு சார் எழுதியிருப்பதால் அது பிழை என்று நினைத்து விடாதீர்கள். கோசல் ச்சார் அப்படிதான் சொல்லுவார்) குடித்தார்களா என்ற சந்தேகம்தான் அது. ஜான் சார் இப்போதெல்லாம் குடி இல்லையாம் ஒன்லி அடியாம். கோசல் ச்சார் பெரியவ அவர் எங்களோடு குடிக்க மாட்டார். அதனால் கொடைக்கான லேக் பக்கத்துல திருநெல்வேலி ஏரியா ரிப்போர்ட்டர் ஜோசப்போட டோயோட்டோ ஈடியோஸ் கார்ல உக்காந்து சரக்கு அடிச்சிருக்கார். ( குமுதம் பத்திரிகையாளர்கள எல்லாம் நல்லா ”மேட்டர் ”(மீட்டர்)பண்றாங்க இல்லாட்டி டோயோட்டோ, ஹுய்ய்ண்டாய், வோல்க்ஸ்வேகன்னு வாங்க முடியுமா?)

றுநாள் சனிக்கிழமை (17-03-2012)காலைல சேர்மன் மேனேஜிங் டைரக்டர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் வரதராஜன் சாரோடு மீட்டிங். காலைலேயே தலைவர் பத்து மணிக்கு வரார்னு பீதியை கிளப்ப ஆரம்பிச்சுட்டாங்க மேல் மட்ட குட்டித் தலைவர்கள். பதினோரு மணிக்கு எண்ட்ரி ஆனார் ஆ.போ. வரதராஜன் சார். தலைவ்ருக்கு கைத் தட்டுங்க என்று ஒரு ஜால்ரா சொல்ல ஒரே கைத்தட்டல்.

கோசல் ச்சார் பேச ஆரம்பித்தார். ‘நம்ம நாட்டுல நிறைய தலைவர்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் பதவி,புகழ், பட்டம், விருது இது பின்னால ஓடுவாங்க. எப்ப கிடைக்கும் எப்படி வாங்கலாம்னு அலைவாங்க. ஆனா நம்ம தலைவர் அப்படி இல்ல. தன்னைத் தேடி விருதும் புகழும் வந்தபோது கூட வேண்டாம்னு சொல்லிட்டார்’ என்று பேச்சை நிறுத்தி ஒரு சஸ்பென்ஸ் விட்டு தொடர்ந்தார்.

                                                   கோசல்ராம் (பேச்சப்பாரு...ஆனா பத்திரிகை தான் விக்க மாட்டிங்குது..)

 ‘சமீபத்துல லயோலா கல்லூரில அவருக்கு சிறந்த நிர்வாகின்னு தேர்ந்தெடுத்து பட்டமும் விருதும் கொடுக்க முன் வந்தாங்க, நம்ம தங்கத் தலைவர் தானைத் தலைவர். அதை வேணாம்னு சொல்லிட்டார்’ என்றதும் இவருக்கு சிறந்த நிர்வாகி விருதா என்ற ஷாக்கில் அரங்கம் அமைதியாகிவிட்டது. உடனே கோசல் ச்சாரே, ‘ அவருக்கு கைத் தட்டுங்க’ என்று கேட்டுக் கொள்ள தண்ணி வாங்கித் தந்த நன்றியுணர்ச்சியுடன் கைத் தட்டினார்கள் ஊழியர்கள்.

அடுத்து பேசத் துவங்கினார் ஆ.போ.வரதராசன் சார். ‘யார் கிட்டயும் செல்போன் இல்லையே’னு கேட்டு முதலில் உஷாரானார். பிறகு, ‘எல்லோரும் நல்லா உற்சாகமா வேலை செய்யனும். எல்லா பிரச்சனையும் சீக்கிரம் தீர்ந்துடும்’னு ஆரம்பிச்சார். உடனே ஏற்கனவே சொல்லி வச்சிருப்பாங்க போல, சேலம் ஏரியா ரிப்போர்ட்டர் கதிரவன் எழுந்தார், ‘ சார், டாக்டர் தரப்புலருந்து பொங்கல் வாழ்த்துலாம் அனுப்புனாங்களே அது என்னது?’னு கேட்டார். அதுக்காகதானே காத்துக்கிட்டிருந்தார் ஆ.போ.வ. ‘ அதையெல்லாம் நம்பாதீங்க. அவங்க சும்மா குழப்பம் பண்றாங்க. நான் என்பத்தஞ்சாம் வருஷத்துலருந்து குமுதத்தை வளர்த்துக்கிட்டு இருக்கேன். அப்போ குமுதத்தை மூடிரலாம்னு இருந்தாங்க. நான் தான் இல்ல, இந்த நிறுவனத்தை மூடக் கூடாது நஷ்டத்துலருந்து நான் மீட்டுத் தரேன்னு சொல்லி நடத்தி இந்த லெவலுக்கு கொண்டு வந்திருக்கேன்’ன்னு சொன்னார்.

( ஊர் திரும்புனதும் பழைய குமுதம் பெருசு கிட்ட கேட்டேன் அப்படியான்னு. அது கெக்கே பிக்கேனு சிரிச்சது. 85ஆம் வருஷம் குமுதம்தான் இந்தியாவுலயே அதிகம் விக்கிற பத்திரிகை கிட்டத்தட்ட ஆறே முக்கால் லட்சம் வித்துச்சு. அப்போ எடிட்டர் எஸ்.ஏ.பி. நல்லா பாத்துக்கிட்டு இருந்தாரு. அது நஷ்டமா? கேக்குறவன் கேனைனு நினைச்சியா?னு டென்ஷன் ஆயிடுச்சு. இப்போ குமுதம் சர்குலேஷன் என்ன தெரியுமா? ரெண்டரை லட்சம். நல்லாதான் வளர்த்திருக்காரு ஆ.போ.வ.)

அப்புறம், ‘கருணாநிதி ஆட்சில என்னை கைது பண்ணாங்க. நாலு மணி நேரம் ஜீப்லயே கூட்டிட்டு சுத்துனானங்க. சிறைல அடைக்க முயற்சி பண்ணாங்க. கடவுள் அனுகிரகத்துல பொழச்சேன்’ன்னு சொல்லி அனுதாப ஓட்டு வாங்க ட்ரை பண்னார். நைட் அடிச்ச் தண்ணியின் நன்றிக்காக சிலர் உச்சு கொட்டினார்கள்.  (  பல கோடி ஆட்டைய போட்டதால அரெஸ்ட் பண்ணாங்க, அப்புறம் ஸ்டாலின் கால்ல வுழுந்து ஜெயில்லருந்து தப்பிச்ச கதையை சொல்ல மறந்துட்டாரு..அதுக்கு விசுவாசமாத் தான் இன்னைக்கு வரைக்கும் ஸ்டாலினுக்கு வாரம் வாரம் சொறிஞ்சு மேட்டர் பண்றாருங்க..!)

கடைசில எடிட்டோரியல நிமிர்ந்து நிக்க வைக்க ஐடியா கேட்டார். (கவர் வாங்காம,யாருக்கும் சொறிஞ்சு விடாம மேட்டர் பண்ணாலே போதும் சார்..)அப்போ போட்டோகிராஃபர் ஞானமணி எழுந்து ஒரு டவுட் கேட்டார். ‘ சார், பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகை படிச்சா தப்பா? போட்டோகிராஃபர்லாம் பேப்பர் படிச்சா தலைவருக்கு புடிக்காதுனு புடுங்கிட்டு போய்டுறாங்க. தப்பா சார்?’ அப்பாவியா மூஞ்ச வச்சுக்கிட்டு கேட்டார். அதுக்கு பதில் சொல்லாமல் நழுவினார் வரதராசன். அடுத்து இன்கிரிமெண்ட் பற்றி கேள்வி.   ‘ கோர்ட் கேஸெல்லாம் முடிஞ்சதும் இன்கிரிமெண்ட் உண்டு’ என்றார். இப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது சினிமா ரிப்போர்ட்டர் ரவிசங்கருக்கும் வரதாபாயுக்கும் வாக்குவாதம் வந்துருச்சு. அதை ஒரு வழியா சமாளிச்சு அசடு வழிய மத்தியானம் சந்திப்போம்னு கிளம்புனார்.

தங்கியிருந்த சபரி ஓட்டல் ஓனர் ரமணி ஐயர், ஆ.போ.வரதராசனுக்கு ”அந்தரங்க” ஆத்மார்த்த நண்பராம்.. அதனால அவருக்கு மட்டும் ”ஸ்பெஷல் ட்ரீட்” கொடுத்தாராம் தனியறையில்.(இந்த இடத்தில் சென்சார்...) அந்த ட்ரீட் திருப்தியில் ஆ.போ.வ.வால் மதிய மீட்டிங்கில் கலந்துக்கொள்ள இயலவில்லை. சாயங்கலாம் கொடைக்கானல் கீழே தான் வாங்கிப் போட்ட எஸ்டேட்களையும் தோட்டங்களையும் பார்த்துக் கொண்டே ஏர்போர்ட்டுக்கு விரைந்தார் ஆ.போ.வ. அதாவது ஆட்டயைப் போட்ட வரதராசன்.இந்த மலை விழுங்கி மகாதேவன் கிளம்பியதும் கொடைக்கானல் மலையே அப்பாடா தப்பிச்சோம் என்று பெருமூச்சு விட்டது.)

அவர் கிளம்பியதும் மதிய கூட்டத்தை திருவாளர்கள் குழும ஆசிரியர் கோசல் ச்சார், கும்மியடிக்கும் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், தலையாட்டி ஆசிரியர் மணிகண்டன், கமுக்க ஆசிரியர் (உ)லோகநாயகி, பணக்கார ஆசிரியர் ஜான் வில்கின்ஸ் தலைமையில் நடந்தது. எல்லோரும் வேகவேகமாய் ஐடியாக்களை வீசினார்கள். மாலை தண்ணீர் அவசரம் அவர்களுக்கு.

மீட்டிங் முடிந்ததும் மீண்டும் தண்ணி பார்ட்டி. வாந்தி. கரூர் ஏரியா ரிப்போர்ட்டர் ஏகமாய் அடித்துவிட்டு பார்ப்போர் காலிலெல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டார். ( ஆ.போ.வ.வுக்கு ஜால்ரா அடித்து திண்டுக்கல், கரூர் பகுதி அரசு அதிகாரிகளை வளைத்துப் போடும் பாவத்துக்கு பிராயசித்தம் போல). மன்னிப்பு கேட்டும் அடங்கவில்லை. அறைக்குள் இருந்த கண்ணாடி மேசையை தூக்கி இரண்டாம் மாடியில் வீச ஒட்டலே அலறிவிட்டது. குழும ஆசிரியர் கோசல் ச்சார் பார்த்துவிட்டு ‘இதெல்லாம் குடிச்சா சக்ஜம்’ என்றூ தட்டி கொடுத்துவிட்டு போய்விட்டார். காரணம் அவரே முழு போதை.

தலையாட்டி ஆசிரியர் மணிகண்டனுக்கு தண்ணியை ஏராளமாய் ஊற்றி விட்டார் கும்மி ஆசிரிய ப்ரியா கல்யாணராமன். அவர் போதை ஓவராகி பாத்ரூமில் வேலை முடிந்தப் பிறகும் அதே பொசிஷனில் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். அப்புறம் சார் இருந்துட்டிங்க வாங்க் என்று கைத் தாங்கலாய் அழைத்து வந்திருக்கிறார்கள்.


ஞாயிறு (18-03-2012)மீண்டும் பாரின் சரக்குகள். ‘ இவ்வள்வு சரக்கா?’ என்று வியந்த நிருபர் ஒருவரிடம் ஜான் வில்கின்ஸ், ‘நீங்க எல்லாம் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தா தலவை இன்னும் கூட சப்ளை செய்வார்’ என்றார். தண்ணி மட்டும்தான் சப்ளை செய்வாரா இல்லை..அதுவுமா என்று கேட்க தோன்றியது. அடுத்த ட்ரிப்பில் கேட்டுக் கொள்ளலாம்  என்று விட்டுவிட்டேன்.(இன்று இரவு நடைபெற்ற ச்ச்சீ சில விஷயங்களை கலகக்குரலின் தரம் கருதி இங்கு பகிர்ந்து கொள்ள இயலவில்லை...)

                                     ஜான் வில்கின்ஸ்(உச்சத்துல்ல கண்ணு எப்படி சொருகிப்போய்க் கிடக்கு பாருங்க..)

திங்கள் (19-03-2012)காலையில் மீண்டும் பஸ் பிராயணம். யாரு தண்ணியடிக்கக் கூடாது என்று குழும ஆசிரியர் கண்டிஷன் போட, அவன் யார் கண்டிஷன் போட என்று செய்தி ஆசிரியர் ஜான் எகிறி குதித்து எல்லோருக்கும் மது சப்ளை செய்தார். இது அவரது சொந்தக் காசா. அடிவருடிகள் சொன்னது.

மொத்த டூருக்கு பத்து லட்சரூபாய் செலவாச்சாம். அத எங்க எல்லோருக்கும் பங்கு போட்டுக் கொடுத்திருந்தா செல்வுக்காவது ஆகியிருக்கும். இதான் நிறைய பேரோட புலம்பல்.

இதுதான் சார் நாங்க் ரூம் போட்டு யோசிச்சது. ஏப்ரல் புத்தாண்டு மலரை பாருங்க இந்த ஐடியால்லாம் தண்ணியா இஷ்யூவுல கொட்டும்”

கொடைக்கானலை விட்டுக் கிளம்பும் பொழுது தங்கியிருந்த ஓட்டல் வெளியே  நரிக்குறவர் ஒருவர் வாட்ச்மேனிடம் சொன்னது தான் பஞ்ச்..

நாடு என்ன நிலையில் இருக்குது சாமியோவ்.கூடங்குளம்,ஜெனிவா தீர்மானம்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு,தானே புயல் பாதிப்புன்னு எத்தனை பிரச்சனை நாட்டில் இருக்கு.உண்மையான பத்திரிகைக்காரனுங்கன்னா அதைப் பத்திக் கவலைப்படணும்.


ஆனா அதைப் பத்தித் துளியும் கவலைப்படாம இங்க வந்து குடிச்சுட்டு,கூத்தடிச்சுட்டு,கும்மாளமிட்டுட்டு,அக்கப்போர் பேசிக்கிட்டு அதுவும் அடுத்தவர் காசுல்ல...தூ இது என்ன மானக்கெட்டவங்க பொழப்பு சாமியோவ்... இதுக்குப் பதிலா....

என்று காறித்துப்பியது யார் காதிலும் விழவில்லை.யாரும் நிதானத்தில் இருந்தாத்தானே..!

கனத்த மனதுடன் கிளம்பினேன்.




Wednesday 21 March 2012

புதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா!




                                                  அஜிதா

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை "முகமூடி"யுடன் செயல்பட்டு வருகிறது.நாம் அதை ஏற்கனவே சொல்லியுள்ளோம்.நுட்பமாக அதனைக் கவனிப்பவர்களுக்கு இது நன்கு புரியும்.

ஆனால் இப்பொழுது நமது பதிவு அது பற்றியது அல்ல.ஆனால் அது தொடர்புடையது இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

அத் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு அதிகாரப் போட்டியில் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட  செய்திப்பிரிவு ஆசிரியர் அஜிதா என்பவர் பற்றியது.

அஜிதா என்பவர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணியாற்றியவர்.நல்ல சம்பளம் கிடைத்ததும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இருந்து விலகி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அசைண்மெண்ட் ஹெட் ஆக இணைந்தார்.

இவரது பணி என்னவென்றால் புதிய தலைமுறையின் அனைத்து செய்தியாளர்களையும் ஒருங்கிணைப்பதும் அவர்களை செய்தி சேகரிக்க எங்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடுவதும் ஆகும்.செய்தி தொலைக்காட்சியில் இது மிக மிக முக்கியமான பதவி ஆகும்.

ஆனால் அவர் பணியாற்றிய சில மாதங்களில் இவரால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை உருவானது.இவரிடமிருந்த பதவி பிடுங்கப்பட்டு பிரேம் சங்கர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

அஜிதாவுக்கு அரசியல் செய்திப்பிரிவு தலைவர்(பொலிடிக்கல் எடிட்டர்) என்னும் புதிய பதவி அளிக்கப் பட்டது. அதன் பிறகுதான் அஜிதாவுக்கும் பிரேம் சங்கருக்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது.

                                                  பிரேம்சங்கர்

மலையாளியான பிரேம் சங்கர் திறமையானவரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி அவர் உச்சகட்ட மலையாள இன வெறியுடன் நடந்து கொள்பவர் என்பது மட்டும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

அதற்கு உதாரணமாக நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.நாம் நான்கு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

முதலாவது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தேனியில் தேமுதிக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.இது முல்லை பெரியாறு பிரச்சனையில் முதல் உயிர்பலி ஆகும்.இது நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக தேனி புதிய தலைமுறை நிருபர் செய்தி சேகரிப்பது தொடர்பாக பிரேம் சங்கரிடம் கேட்கிறார்.அவரோ இதுவெல்லாம் ஒரு செய்தியா?என்று மறுத்து விடுகிறார்.மலையாள வெறியுடன் பிரேம் நடந்து கொண்டார் எனது அப்பொழுது அலுவலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ரண்டாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் மலையாளிகளால் மூன்று வார காலம் தொடர்ந்து தாக்கப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி எதுவும் உரிய முக்கியத்துவத்தில் பதிவாக வில்லை.

ஆனால் ‘அதற்கு பதிலாக தமிழர்கள் நல்ல பாதுகாப்புடன் இருக்கிறார்கள்!’ என்று இடுக்கி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையும் ஊடகவியலாளர் சந்திப்பும் மிக அதிக முக்கியத்துவத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெளியானது.

தமிழர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலைச் செய்திக்குத் தகுதியானது என்று கருதாத பிரேம் சங்கர், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை மிக அதிக முக்கியத்துவத்துடன் செய்தி வெளியிட்டது எதற்கு? என்று அப்பொழுதே புதிய தலைமுறை செய்தியாளர்கள் அலுவலகத்தில் முனங்கினர். இதனைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்களும் விமர்சனம் செய்தனர்.

மூன்றாவது முல்லை பெரியாறு பிரச்சனையில் மலையாள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த ”டேம் 999” படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது அது 20 லட்சம் தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விஷயம்,மேலும் தமிழ்நாட்டின் உரிமைப்பிரச்சனை என்று அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்க புதிய தலைமுறை தொலைக்காட்சியோ அதனை கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனையாக திசை மாற்றியது.தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று ஒப்பாரி வைத்தது. இதுவும் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. விவாதம் என்ற பெயரில் இதற்கு ஆதரவாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியது.

நான்காவது செப்டம்பர் 17 பெரியார் நினைவு நாள் ஆகும்.அதே நாள் தான் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஆகும்.இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் நிகழ்ச்சிகள் நடத்தின.ஆனால் பிரேம் சங்கரோ பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.எம்.ஜி.ஆர்.மலையாளியாம்.அதனால் ”தனிப்பாசத்துடன்” நடந்து கொண்டார்.

மேற்கண்ட அனைத்தும் பிரேம்சங்கர் என்பவர் தன்னை ஊடகவியலாளராகக் கருதாமல் மலையாள இனவெறியராக புதிய தலைமுறையில் பணியில் நடந்து கொண்டார் என்பதற்கு சொல்லப்பட்டது ஆகும்.ஆனால் உயரிய பொறுப்பில் இருப்பதால் யாராலும் அவரைக் கேள்வி கேட்க முடியவில்லை.(இவர் மனைவி சந்தியா.இவரும் புதிய தலைமுறையில் பணிபுரிகிறார். இவர்  தான் இலங்கை சென்று வந்த பின்  உண்மையைத் தேடி என்ற பெயரில் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு சார்பான ஆவணத் தொகுப்பு வீடியோ ஒன்றை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிட்டார்.)

                                                                              சந்தியா

இவ்வாறு அந்த கால கட்டத்தில் பிரேம்சங்கரின் மலையாள வெறி தொலைக்காட்சி செய்திகளில்கொடி கட்டிப் பறந்தது.ஏற்கனவே இவரால் பாதிக்கப்பட்ட அஜிதா இதனைப் பயன்படுத்தி நிர்வாகத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட அனைத்தையும் சொல்லிய அஜிதா இவர் சேனலை மலையாளிகளின் சேனலாக நடத்த முயற்சிக்கிறார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனைக் கேட்டுக்கொண்டு அதன் நிர்வாக இயக்குனர் சத்திய நாராயணன்(பச்சமுத்துவின் மகன்)சொன்னது தான் பஞ்ச்.

தம்பி எனக்கு மலையாளத்தில் சேனல் நடத்துற ஐடியா எதுவும் இல்லை,அங்க காலேஜ் நடத்துற ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.அதனால நீஙக கேரளாவுக்கு ஆதரவா செய்தி வெளியிட வேண்டாம்.பிரச்சனை வராம பாத்துக்கங்க’ என்று நாசூக்காக சொல்லி பிரச்னையை முடித்து வைத்தார்.

அப்பொழுதைக்கு அமைதியான மாதிரி காட்டிக் கொண்ட பிரேம் சங்கர் அதன்பிறகு அஜிதாவைக் காலி பண்ணுவதற்கு சமயம் பார்த்தார்.

அரசியல் செய்திப் பிரிவு எடிட்டர் (பொலிடிக்கல் எடிட்டர்)பதவியில் இருந்து அஜிதாவை காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.

அஜிதா இப்பொழுது வாரம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.அது போக நேர்படப்பேசு என்னும் தினசரி விவாத நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது என்றும் அதனை எப்படி நடத்துவது என்றும் ஆலோசனை அளிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார். இந்த நிகழ்ச்சி முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைக் காலி பண்ணுவதற்கு திட்டம் தீட்டினார்.முதலில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சிக்குச் சரியான வரவேற்பு இல்லை என்று உரிய இடத்தில் “பத்தவைத்து” அதனைக் காலி செய்தார்.வாரம் ஒருமுறை வெளியான நேர்காணல் பகுதி நிறுத்தப்பட்டது.

அடுத்ததாக டெக்கான் க்ரானிக்கலில் இருந்து சீனியர் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்டாக இருக்கும் குணசேகரனை நிர்வாகத்தில் பேசி அழைத்து வந்தார். அஜிதாவுக்கு உயரிய பொறுப்பாக அவருக்கு சீனியர் பொலிடிக்கல் எடிட்டர் என்னும் பதவி அளிக்கப்பட்டது.பிரேம்சங்கர் குணசேகரனுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.அதன்பின் சீனிவாசனிடம் பேசி அஜிதாவின் ”நேர்படபேசு” நிகழ்ச்சி பொறுப்பு குணசேகரன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

                                                       குணசேகரன்

எத்தனையோ இடங்களில் வேலைபார்த்த அனுபவமிக்க குணசேகரனுக்கு இந்த ”சூட்சுமங்கள்” புரியாதா என்ன? பிரேம்சங்கர் கூட்டணியின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துகிறார். அப்புறம் என்ன?

அப்புறம் என்ன?அஜிதா டம்மியாக்கப் பட்டார்! இதை எதிர்த்து நிர்வாகத்திடம் போராடிப்பார்த்தார்.ஒன்றும் நடக்கவில்லை.

வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்.

டுபுலி ஆட்டத்தில் அஜீதாவைக் காலி செய்த பிரேம்சங்கர்-தலைமையிலான இந்தக் கூட்டணி(இதில் இப்பொழுது நிறையப்பேர் இணைந்திருக்கிறார்கள்...) இப்பொழுது நியூஸ் அவுட்புட் எடிட்டர் ராமைக் காலி செய்யத் திட்டம் தீட்டுகிறார்கள்.அவரும் இதை உணர்ந்தோ என்னவோ மிகவும் எச்சரிக்கையாய் இருக்கிறாராம்.

பொறுத்திருந்து பார்ப்போம்..! (இந்த உண்மை தகவல் சற்று தாமதமாக!)

Sunday 18 March 2012

"பராக்கிரம" செய்தி ஆசிரியர்-வெறும் குடமும் தளும்பாது...!



இப்பொழுது நாட்டில் எந்த நிகழ்வானாலும் நாம் பார்க்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது சூரியத் தொலைக்காட்சியின் செய்தி.அதில் செய்தியாளர்களை ஆட்டிப் படைப்பவர் ராசா.இவர்  அந்நிறுவனத்தின் துணைத்தலைவரும் கூட.

வர் இப்பொழுது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவரது ஆரம்ப காலம் மிகவும் அரைவேக்காட்டுத்தனமானது.நாட்டு நடப்போ அரசியல் அறிவோ எல்லாம் அவருக்கு கொஞ்சம் சுட்டுப் போட்டால் தான் வரும்.ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்னும் கோதாவில் ஒருவித தெனாவட்டாக வலம் வருவார்.பார்ப்பவர்கள் இவர் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.ஆனால் நெருங்கியவர்களுக்குத் தான் தெரியும்.அய்யா ஒரு ”ஞானசூனியம்” என்று.(இப்ப மட்டும் எப்படியாம்?இப்பவும் அப்படித்தான் என்று சூரியத் தொலைக்காட்சி நிருபர்கள் கடுப்புடன் சொல்வது நம் காதில் விழுகிறது)

சாம்பிளுக்கு ஒன்று மட்டும் ..

அப்பொழுது தினகரன் நாளிதழ் உண்மையான முதலாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட நேரம்.புது முதலாளியின் எடுபிடிகள் நிறையப்பேர் தினகரன் அலுவலகத்தை மதப்புடனும் திமிருடனும் புதுப்பணக்காரன் தோரணையுடனும் வந்த சமயம் அது.அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஒன்று செவிவழிச் செய்தியாகி நம் காதுக்குள் வந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஒரு செய்தியைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார்.

குமரியில் நில நடுக்கம்

இது என்ன செய்தி? குறைகுடம் கேட்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மலையைப்பிளக்க வெடி வைத்ததில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது.இதனால் வெடிச்சத்த அளவு அதிகமாகியதால் லேசாக நிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.ஆனால் அதை மக்கள் நில நடுக்கம் என்று தவறாக நினைத்து விட்டார்கள்.அது குறித்த செய்தி தான் இது என்று பதில் சொல்லியிருக்கிறார்.
அடுத்து குறைகுடம் கேட்ட கேள்வி இதுதான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா?

இதைக்கேட்டு செய்தியாளர் திகைத்துப் போக அருகில் குறைகுடத்திற்கு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த துணை ஆசிரியர்களில் ஒருவர், ”கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி மலை இருக்குல்ல அதச் சொல்லியிருக்காங்க சார்” என்று சொல்லி குறைகுடத்தைக் காப்பாற்றி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாய் அடுத்த பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றார்.

(ஆனால் தினகரன் துணை ஆசிரியர் அப்பொழுது மனதுக்குள்ளும் மறுநாள் குடிபோதையில் அனைவரிடமும் திட்டினார் என்பதும் செய்திக்குத் தொடர்பில்ல்லாத விஷயம்..)

இங்கு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா என்பது கூடத் தெரியாமல் ஆச்சரியப்பட்டவர் எல்லாம் இன்று நாடே பார்க்கும் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களையும் அரசியலையும் சொல்லும் பிரிவுக்கு ஆசிரியர்....

என்னத்தச் சொல்றது...! நாடு வெளங்குனாப்ல தான்....!
-------------------- 



இதுவும் இப்பொழுது சூரியத் தொலைக்காட்சியில் கோலோச்சும் வெறுங்குடம் ராசா பற்றிய செய்தி தான். 


அப்பொழுது குறைகுடம் முரசொலியில் பிழை திருத்துநராக வேலையில் இருந்தார்.இவரது ஆரம்ப கட்டத்திற்கு அடுத்த கட்டம் தான் இந்த வேலை.அடுத்த கட்டம் இப்படியென்றால் முதல் கட்டத்தில் என்ன வேலை செய்தார் என்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்கப்பிடாது.

அப்பொழுது முரசொலிமாறன் தமிழன் என்றொரு வாரப் பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான வேலையை முழுமூச்சாகச் செய்ய ஒரு குழுவை இறக்கி விட்டிருந்தார்.முரசொலி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் இந்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.அதற்குப் பொறுப்பாசிரியர் கேசவன் என்பவர்.இவர் யாரென்றால் பழைய தினகரனின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.கொஞ்சம் நல்ல மனுஷரும் கூட.

ஆனால் இவருக்கு கொஞ்சூண்டு வெளியே தெரியாத பந்தா குணமும் உண்டு.தமிழன் இதழ் அலுவலகத்தில் இவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுக் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்தார்.பத்திரிகை விரைவில் வெளிவர இருந்த சமயம் அது.

கேசவன் தன்னுடன் பணியாற்றிய நிறையப்பேரைத் தொலைபேசியில் அழைத்து முரசொலி அலுவலகத்திற்கு வாங்க!.பாத்து ரொம்ப நாளாச்சு.பேசுவோம் என்று அழைப்பு அனுப்பினார்.நிறையப்பேர் அவர் அழைப்பிற்கு இணங்க சந்திக்க வந்தாலும் சிலர் மட்டும் என்னத்த...இதுக்கு இவர் தினகரனில் வேலை பார்த்திருக்கலாம்.இந்த வளாகத்தில் இருந்து வர்ற தமிழன் எப்படி உருப்பட முடியும் என்று புலம்பியது தனிக்கதை.(கடைசி வரை தமிழன் உருப்படவில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை)

அந்த சமயத்தில் ஒருநாள் வந்தவர் தான் சண்முகசுந்தரம் என்பவர்.இவர் தினகரனில் வேலை செய்து கொண்டிருந்தவர்.அவருடன் கேசவன் நாட்டு நடப்பு,தினகரன் நடப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று தூரத்தில் இருந்த ஒருவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட ஆரம்பித்தார்.

ஏய்..இங்க வா..நான் உன்னைய என்ன சொன்னேன்?ஆனா நீ அங்க என்ன பண்ணிக்கிட்ருக்க.. இந்த மேட்டர் முழுவதும் தப்புத்தப்பா இருக்கு.அத ஒழுங்காப் பாருன்னா,நீ என்னடான்னா வண்ணத்திரையில நடுப்பக்கத்தை விரிச்சு நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்ருக்க.இதுக்கா உனக்கு இங்க சம்பளம் தர்றாங்க...இது சரிப்படாது.இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்ப கொட்ட முடியாது பாத்துக்க..போய் ஒழுங்கா வேலையப் பாரு.இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று எச்சரித்து அனுப்பினார்.

வண்ணத்திரையின் நடுப்பக்கம் பார்த்த மவராசனும் தலையைக் குனிந்து கொண்டு இடத்தைக் காலி செய்தார்.

இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்பை கொட்ட முடியாது என்று அன்று எச்சரிக்கப் பட்ட மவராஜா யாரு தெரியுமா?

சூரியத் தொலைக்காட்சியில் செய்தியாளர்களை ஆட்டிப் படைக்கும் மவராசன் தான் அவர்.
அன்று அலுவல் நேரத்தில் ஒழுங்காய் வேலை செய்யாமல் திட்டு வாங்கியவர் இன்று நிறுவனத்தின் துணைத்தலைவர் என்ற கோதாவில் அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் அத்தனை பேரையும் தரக்குறைவாகப் பேசுவதே இவரின் தகுதியாகி விட்டது.

இவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் இவரை விட இத்துறையில் தகுதியானவர்களாக இருந்தாலும் என்ன செய்வது?
இவர் பரம சிவன் கழுத்துப் பாம்பாக இருக்கிறார்.அதனால் கருடன்களை எல்லாம் நாவில் வந்தபடி பேசித் திரிகிறார்."உள் நோக்கத்துடன்" சில பெண் ஊழியர்களையும் கேவலமாய்த் திட்டிக் கொண்டிருக்கிறார்.கொஞ்ச நாளில் ஊழியர்களை வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

என்னத்தச் சொல்றது?நாடு வெளங்குனாப்ல தான்....

Wednesday 14 March 2012

தமிழன் பிணத்தைக் காட்டி இனத்தை பேசி பணம் பண்ணும் நக்கீரன்!




இன்று காலையில் நக்கீரன் இதழின் அட்டையைக் கடையில் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.பிரபாகரன் மகன் படுகொலை-கதற வைக்கும் ஆதாரங்கள் என்னும் தலைப்பு நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.

பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் ஏற்கனவே வந்திருந்தாலும் கதற வைக்கும் ஆதாரங்கள் என்னும் நக்கீரனின் அட்டைப்படச் செய்தி நம்மைத் திகைக்க வைத்தது.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து இதுவரை வெளிவராத ஆதாரங்களை நக்கீரன் புலனாய்வு புடலங்காய் ஆய்ய்ய்வு செய்து வாசகர்களுக்கு அறியத் தந்துள்ள்ளார்கள் என்னும் எண்ணத்திலும் ஈழப்போரின் இறுதியில் பிரபாகரன் அவர்களின் மகனை என்னென்ன  சித்திரவதைகள் செய்தார்களோ என்பதைத் தெரியும் எண்ணத்திலும் வாங்க முடிவு செய்தோம்.

ஆனாலும் உள்மனது நம்மை உறுத்தியது.ஏற்கனவே நாம் நக்கீரனின் பொய்யும் புரட்டும் குறித்து நன்கு அறிந்திருப்பதாலும் இது குறித்து ஒரு பதிவும் வெளியிட்டிருப்பதாலும் அதிகமாக யோசித்தோம்.

http://kalakakkural.blogspot.in/2011/12/blog-post_25.html 

ஆனாலும் எவ்வளவோ பெரிய அயோக்கியர்களும் கூட மனம் மாறுகின்றார்களே!
பணத்திற்காக சமூகத்தைக் கெடுக்கும் வகையில் சாராயம் காய்ச்சி,கஞ்சா விற்பவன் கூட மனம் மாறுகின்றானே!

பசிக்காக அல்லாமல் உடம்பு தினவெடுத்து விபச்சாரம் செய்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் மனம் மாறுகின்றார்களே!

நம்ம நக்கீரன் ஆசிரியர் குழு மனம் மாறியிருக்காதா என்று அசட்டுத் தைரியத்தில் துணிந்து இதழை 10 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினோம்.

அதனைப் படித்து முடித்த பின்பு தான் எவ்வளவு பெரிய அயோக்கியனும் கூட மனம் மாறுவான்.ஆனால் நக்கீரன் மாறவே மாறாது என்று கட்டச் சுவற்றில் காறித்துப்பினோம்.ஏனென்றால் ஆசிரியர் குழு நம் அருகில் இல்லை.

இனி மேட்டருக்கு வருவோம்.

நக்கீரனில் வெளிவந்த அட்டை மேலே இருக்கிறது.ஆனால் அதைப் பார்த்துக் காசு கொடுத்து வாங்கினால் உள்ளே இதழில் இருக்கும் செய்தி இது தான்.





அட்டைப் படச் செய்திக்கும் உள்ளே இருக்கும் செய்திக்கும் சிறிதாவது தொடர்பு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஒன்றும் இல்லை.ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானம் குறித்த ஒரு சிறு அறிமுகம்.

அதுவும் நக்கீரன் ஆய்ந்து எழுதியது ஒன்றுமில்லை.தினத்தந்தி செய்தியைப் பார்த்தும் இணையத்தில் இருந்தும் சுடப்பட்ட செய்தியை வைத்து ஒரு பக்கத்தில் அறிமுகம். மற்றும்சீமான்,நாஞ்சில்சம்பத்,சி.மகேந்திரன்,திருமாவளவன்,பொன்.ராதாகிருஷ்ணன்,வேல்முருகன் ஆகியோரிடம் ஒரு கருத்து என 3 பக்கங்கள் வாங்கி 4 பக்கங்களை ஒப்பேற்றியிருக்கின்றார்கள்.

இதில் ஊடக நெறிமுறைக்கு மாறாக இறந்த பெண் போராளிகளின் நிர்வாணமான உடல்களை வண்ணப் படங்களாக வெளியிட்டு அருவருக்கத்தக்க வணிக நோக்கத்தை தரம் தாழ்ந்து நிறைவேற்றியிருக்கிறது நக்கீரன்.

உள்ளே ஒரே ஒரு வரி பிரபாகரன் மகனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது என்று வேல்முருகன் பேட்டியில் வருகிறது.அவ்வளவு தான்.இதைத்தவிர வேறு செய்தியோ பிரபாகரன் அவர்களின் மகனின் படுகொலை குறித்தோ கதறவைக்கும் ஆதாரங்களோ ஒன்றுமில்லை.

ஆனால் அட்டையிலோ பிரபாகரன் மகன் படுகொலை-கதற வைக்கும் ஆதாரங்கள் இந்தியா?கொதித்தெழும் தமிழகம் என்று தலைப்பு.

அட்டையைப்பார்த்து நாடு முழுவதும் எத்தனை நபர்கள் இதழைக் காசு கொடுத்து வாங்கியிருப்பார்கள்?அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்?

எதற்கு இந்த ஊடக பொறுக்கித்தனம்.எதற்காக இந்தச் செய்தி?இந்தச் செய்தியை எழுதியவர் நக்கீரனின் தலைமை நிருபர் ஆர்.இளைய செல்வன் என்பவர்.(கொழும்பிலிருந்து எழில் எழுதுபவரும் இவர் தான்)செய்தியை எழுதியதைத் தாண்டி இவர் பங்கு இதில் எதுவுமில்லை.படங்களை வைப்பது அட்டைப்படத்தைத் தீர்மானிப்பது எல்லாம் இவர் கையில் இல்லை.

அதெல்லாம் நக்கீரன் ஆசிரியர் குழு முடிவு செய்வது தான்.அதற்கு ஏன் இந்த கழிசடைத்தனம்?

ஈழப்பிரச்சனையில் இனத்தை அழித்தவர்களுடன் சமரசமாகி கும்மாளமிட்ட கருணாநிதியின் நிழலில் இருந்து கொண்டு ஏற்கனவே பல துரோகங்களை எழுத்தில் பதிவு செய்த நக்கீரன்,கஸ்பரின் புனைவுகளையும் பொய்யையும் சுருட்டிக் கட்டுரைகளை வெளியிட்டுக் கல்லா கட்டிய நக்கீரன் இன்னும்  திருந்தியபாடில்லை.

இனத்தை வைத்தும் இனத்திற்காகத் தன் இன்னுயிரை இழந்தவர்களின் பொன்னுடலை வைத்தும் காசு பார்க்கிறது.உடலை வண்ணத்தில் வெளியிட்டு மாரடிப்பது போல நடித்து சக தமிழனின் பாக்கெட்டில் கையை விட்டுக் காசு திருடுகிறது.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படின்னு தலைப்பு வேற

எப்பொழுது தீரும் நக்கீரனின் பொய்யும் புரட்டும்?

நீங்க திருந்தவே மாட்டீங்க...!எவ்வளவு சொன்னாலும்.

துக்குப் பதிலா ஒன்னு செய்யுங்க.பேசாம பத்திரிகை பேரை மாத்திக்கங்க!

உங்களுக்கு சரியான தலைப்பு கிடைக்கலைன்னா நாங்க சொல்றோம்.



                                 கோயபல்ஸ்.

ஓகே?

அவர் ஆரியர் அப்படிங்குறதுன்னால ரொம்ப யோசிக்குறீங்களா?

அடுத்து ஒரு பேரச் சொல்றோம்.

எப்படியும் கண்ண மூடிக்கிட்டு சரின்னு சொல்வீங்க.



                        கலைஞர்.
ஓகே தானா?

டபுள் ஓக்கே..!டபுள் ஓக்கே!

இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.பேர மாத்திட்டா தலைவரும் சந்தோஷப்படுவாருல்ல..அதிமுக காரன் ஆபீஸ் மேல கல் வீசிட்டாலும் கலைஞர் மேல கல்வீச்சுன்னு திமுக காரன் வாசலுக்கு வந்துடுவான்ல.கல் எறியுற அதிமுக காரன் ஓடிடுவான்ல

நல்ல ஐடியாண்ணே..!வாழ்க கலைஞர் குரல்..சாரி கலகக்குரல்..

சரி தம்பி எதுக்கு இங்க கை கட்டிட்டு?நீங்க வேற நான் வேறயா?அறிவாலயம்,கோபாலபுரம் போனா மட்டும் பணிவக் காட்டுங்க தம்பி..!

சரிண்ணே..அந்த முகாம்ல ரபி பெர்னார்ட்க்கு கிடைச்சிடுச்சு..நாமும் எத்தனை வருஷமா அடிக்கிறோம்.ஒண்ணும் நடக்கல.கலைஞர் ன்னு பத்திரிகை பெயர் மாறின பின்னாடியாவது தலைவர் ராஜ்யசபாவுக்குஅனுப்புறாரான்னு பார்ப்போம் அண்ணே...