Tuesday 7 August 2012

தினகரன் -வெளியே தள்ளப்பட்ட தலைமை புகைப்படக்காரர் முத்து கணேஷ்..!


முத்துகணேஷ்

தனது “சகலகலா திறமை”யால் உச்சத்திற்கு சென்றவர் தினகரன் முன்னாள்தலைமை புகைப்படக்காரர் முத்துகணேஷ்.இன்றோ வேலையை விட்டே வெளியே தள்ளப்பட்டுள்ளார்.அவரைப் பற்றிய பதிவு இது.

கேடி பிரதர்ஸ் வசம் தினகரன் கைமாறிய பொழுது பல்வேறு நிறுவனங்களில் இருந்து புகைப்படக்காரர்கள் அதிக அளவில் பணியில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் அண்ணா சாலை தினமலரைச் சேர்ந்த சங்கர்,எழும்பூர் தினமலரைச் சேர்ந்த முத்து கணேஷ் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரில் தலைமை புகைப்பட நிருபராக சங்கரை நியமிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவியது.சங்கர் அதிக திறமை வாய்ந்தவரும் கூட...

சங்கர்


ஆனால் செய்தி ஆசிரியர்களில் இருவரையும் இணை ஆசிரியர் ஒருவரையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி,லாபி செய்து தலைமைப் பதவிக்கு குறுக்கு வழியில் முத்து கணேஷ் வந்தார்.சங்கர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.அத்துடன் ஒயவில்லை முத்து கணேஷ்.சங்கர் தினகரனில் இருந்தால் என்றாவது தனது தலைமைப் பதவிக்குச் சிக்கல் வரும் என்று கருதி பல்வேறு உள்ளடி வேலை செய்து எட்டு மாதத்தில் அவரை ஒழித்துக் கட்டினார்.( சங்கர் இப்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பில் தலைமை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்)

சங்கரைப் போல முத்து கணேஷால் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சிலர்.அவர்கள் பிரபு கார்த்திக்,அண்ணாமலை,விநாயகம்.அதை மட்டும் பார்ப்போம்.

முதலில் பிரபு

பிரபு கார்த்திக்



முத்துகணேஷ் உத்தரவின் பேரில் வேறொரு பத்திரிகை நிறுவனத்தில் உள்ள ஒரு புகைப்படக்காரருக்கு தன்னுடைய மின்னஞ்சலில் இருந்து பிரபு சில புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார்.இந்த சம்பவம் நடந்து முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு பிரபுவை முத்து கணேஷூக்குப் பிடிக்கவில்லை.அவரைப் பழி வாங்க நினைத்தவர் 6 மாதம் முன்பு அனுப்பிய புகைப்படத்தை இப்பொழுது அனுப்பியது போல ஒரு கம்ப்யுட்டர் என்ஜினியர் உதவியுடன் நிர்வாகத்திடம் புகார் கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதோடு நில்லாமல் பிரபு எங்கு போய் வேலை கேட்டாலும் அங்கு போன் செய்து அங்குள்ள தனக்கு வேண்டப்பட்ட புகைப்படக்காரர்களுக்கு போன் செய்து வேலைக்குச் சேர விடாமல் தடுக்கிறார்.(இப்பொழுது பிரபு குமுதம் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்)

விநாயகத்தின் கதையோ வேறு மாதிரி.

இவரை முத்து கணேஷூக்கு அறவே பிடிக்காது.ஆகவே காலி செய்ய சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்.அதற்கேற்றாற் போல் சந்தர்ப்பமும் அமைகிறது.

ஒரு முறை தினமலரில் இருந்து தினகரனுக்கு ஒரு புகைப்படத்தை வாங்க வேண்டியது வருகிறது.ஆகவே  தினமலர் நிர்வாகத்துக்குத் தெரியாமல்அங்குள்ள புகைப்படக்காரரைத் தொடர்பு கொண்டு சில புகைப்படங்களைத் திருட்டுத்தனமாக தினகரன் புகைப்படக்காரர் வாங்குகிறார்.ஆனால் எதிர்பாராதவிதமாக மறுநாள் தினமலரிலும் தினகரனிலும் ஒரே பிரேம் புகைப்படம் வெளியாகிறது.

இதைக் கண்டு ஆத்திரமுற்ற தினமலர் நிறுவனம் திருட்டுத்தனமாக புகைப்படம் அனுப்பிய புகைப்படக்காரைக் கண்டுபிடித்து உடனடியாக பணி நீக்கம் செய்கிறது.நீக்கம் செய்யப்பட்ட தினமலர் புகைப்படக்காரர் முத்துக்ணேஷூக்கு போன் செய்து புலம்புகிறார்.உடனே இதனை கிரிமினலாகப் பயன்படுத்திக் கொண்ட முத்துகணேஷ், தினகரனுக்கு புகைப்படம் அனுப்பியதை தினமலர் நிர்வாகத்திடம் காட்டிக் கொடுத்தது தினகரன் புகைப்படக்காரர் விநாயகம் என்று தனது நிர்வாகத்திடம் புகார் பட்டியல் வாசிக்கிறார்.நிர்வாகமும் விநாயகத்தை உடனே டிஸ்மிஸ் செய்கிறது.தவறு செய்யாத விநாயகம் இப்படியாக பழி வாங்குகிறார்.(விநாயகம் மிது தவறு இல்லை என்னும் உண்மையைத் தாமதமாக   தெரிந்து கொண்ட நிர்வாகம் சில காலங்களுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது)

அண்ணாமலை பாதிக்கப்பட்ட கதை அடுத்தது.

முத்து கணேஷூம் விஜயகுமாரும் டெய்லி கிளாஸ் மேட்ஸ்.இதன் செலவு முழுவதும் விஜயகுமார் பொறுப்பு.இதுக்கு எப்படி காசு வரும்னு யாரும் கேட்கக் கூடாது.இதனால் முத்து கணேஷின் செல்லப்பிள்ளை மாதிரி விஜயகுமார் இருந்து கொண்டு மற்ற புகைப்படக்காரர்களை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்.அதில் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை.இதனால் இருவருக்கும் முட்டல் மோதல் இருந்தது.

விஜயகுமார்.


இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கையில் விஜயகுமார் சொன்னதன் பேரில் முத்து கணேஷ் C.E.O.ஆர்.எம்.ஆரிடம் புகார் செய்கிறார்.இதனால் அண்ணாமலையைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறார் ஆர்.எம்.ஆர்.இதன் பிறகு அண்ணாமலைக்கு விஜயகுமார் மீது கோபம் அதிகம் ஆகிறது.இந்த சூழ்நிலையில் நடைபெற்ற ஒரு மது விருந்தில் அண்ணாமலை விஜயகுமாரைப் புரட்டி எடுக்கிறார்.இந்தப் பிரச்சனையை முத்து கணேஷ் ஆர்.எம்.ஆரிடம் வேறு விதமாகப் புகார் செய்ய எச்சரிக்கப்படுகிறார் அண்ணாமலை.இதற்கு மேல் இங்கு வேலை பார்க்க முடியாது என்று முடிவுக்கு வந்த அண்ணாமலை தினமணிக்குத் தாவி விட்டார்.

இப்படி 7 ஆண்டுகளாக தினகரனில் குழி பறிப்புகள்,பாலிடிக்ஸ் செய்து தலைமைப் புகைப்படக்காரராகக் கோலோச்சிக் கொண்டிருந்தவர் முத்து கணேஷ்.இவரின் கீழ் தமிழ்நாடெங்கும் 110 புகைப்படக்காரர்கள் தினகரனில்  பணியாற்றினர்.

சில முறை மது போதையில் வெளி இடங்களில் சில பிரச்சனைகளில் சிக்கி அது நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பொழுதும் கூட எச்சரித்து விட்டது நிர்வாகம்.C.E.O.ஆர்.எம்.ஆர்.இவரைக் கண்டுகொள்ளவில்லை. அப்படிப்பட்ட இவருக்கும் சறுக்கல் தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்கள் மீது கை வைத்துக் கொண்டிருந்த முத்து கணேஷ் ஒரு கட்டத்தில் வரம் கொடுத்த பூசாரி மீதே கை வைத்து விடுகிறார்.அது தான் இவருக்கு இன்று வினையாய்ப் போனது.



மதுரையில் சில மாதங்களுக்கு முன் மாநில பா.ஜ.க.மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு புகைப்படங்களை எடுக்க சென்னையில் இருந்து முத்து கணேஷ் செல்கிறார்.மாநாட்டுக்கு முந்திய நாள் மதுவின் உச்சத்தில் இருந்த முத்து கணேஷூக்கும் அருகாமை அறையில்  இன்னொரு முக்கிய பா.ஜ.க.நிர்வாகிக்கும் கடும் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படுகிறது.
அதில் பா.ஜ.க.நிர்வாகியை கடுமையான வார்த்தைகளால் பிரித்து மேய்ந்து விட்டார் முத்து கணேஷ்.இதில் பாதிக்கபப்ட்ட பா.ஜ.க. நிர்வாகி இன்னொரு முக்கிய நிர்வாகியும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ஜானகிராமனிடம் முறையிடுகிறார்.


ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன்.

ஜானகிராமன் வேறு யாருமல்ல.C.E.O.ஆர்.எம்.ஆரின் உடன்பிறந்த சகோதரர்.அவர் தனது தம்பியிடம் புகார் பட்டியலை சத்தமாக வாசிக்கிறார்.இதனைத் தொடர்ந்து அண்ணன் சொல்லினை   வேதவாக்காய் எடுத்துக் கொண்டுஆர்.எம்.ஆர். முத்து கணேஷை 15 நாள் சஸ்பெண்டு செய்கிறார்.அவரிடம் இருந்த தலைமை புகைப்படக்காரர் பதவியும் பறிக்கப்படுகிறது.இதன் பிறகு இவரைத் தொடர்ந்து தட்டி வைக்கவும்,முடிந்தால் வெளியே தள்ளவும் ஆர்.எம்.ஆர். திட்டமிடுகிறார்..

15 நாட்கள் கழித்து திரும்ப பணிக்கு வந்தவருக்கு பழைய பதவி அளிக்கபப்டவில்லை. பதவி இறக்கம் செய்யப்பட்டு தினகரனின் ஞாயிறு இலவச இணைப்பான சண்டே ஸ்பெஷல் பகுதியின் புகைப்படக்காரராக நியமிக்கப்படுகிறார்.110 புகைப்படக்காரர்களுக்குத் தலைமை வகித்தவர் ஒரு சாதாரண புகைப்படக்காரராக பணிபுரியும் சூழல் உருவாகிறது.ஆனாலும் தனது பழைய பந்தாவையும் தெனாவட்டையும் நக்கல் பேச்சினையும் விடவில்லை முத்து கணேஷ்.ஆர்.எம்.ஆர். அடுத்த சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார்.

C.E.O. ஆர்.எம்.ஆர்.
.

இந்தநிலையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்திற்கு வரவில்லை முத்து கணேஷ். யாரைக் கேட்டாலும் என்னிடம் தகவல் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.இதனை பயன்படுத்திக் கொள்கிறது நிர்வாகம்.உரியவர்கள் யாரிடமும் தகவல் சொல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்ளும் முத்துகணேஷின் தெனாவட்டு அவரது அலுவலகப் பணிக்கு முடிவுரை எழுதுகிறது. மறு நாள் முத்து கணேஷ் வந்தவுடன் நிர்வாகம் அவரைக் கடுமையாக எச்சரிக்கிறது.

ஒழுங்கா இருக்க முடியாத ஆளுங்க எங்களுக்குத் தேவை இல்லை என்று ஆர்.எம்.ஆரால் வெளியே தள்ளப்படுகிறார் முத்து கணேஷ்.தலைமைப் புகைப்படக்காரர் என்று உச்சத்தில் இருந்தவர் பதவி பறிக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறார்.

நிர்வாகத்தின் துணையுடன் ஆடிய ஆட்டம் என்ன..?இன்றோ அதே நிர்வாகத்தால் நிராதரவாய் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டுள்ளார் முத்து கணேஷ்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ முத்துகணேஷூக்குப் பொருந்துகிறது...!

2 comments:

பலசரக்கு said...

awesome

Anonymous said...

வணக்கம்.நான் சென்ற வார இந்தியா டுடே இதழில் உங்கள் இணையம் குறித்து வெளிவந்த கட்டுரை படித்தேன்.சிறப்பு. இதற்கு மாற்றுக்கருத்து சொல்லிய ஞாநியிலிருந்து அனைவரும் சரியான நபர்கள்.ஆனால் அன்பழகன் என்பவரும் தனது கருத்தைச் சொல்லியிருந்தார்.அவர் அண்டப்புளுகு என்று நீங்கள் பலமுறை விமர்சித்திருந்தீர்கள்.கலகக்குரலின் சார்பில் பலரை ஆதாரப்பூர்வமாய் விமர்சித்திருக்கின்றீர்கள்.அவர்களில் யாரிடமாவது கருத்து வாங்கிப் போட்டிருக்கலாம்.ஆனால் அதை விடுத்து அன்பழகன் குறித்து பிரம்படி என்னும் ஒரு பிளாக்கில் வெளிவந்த விமர்சனத்தினை ஒட்டி அன்பழகனிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்கிறது.அன்பழகன் தான் கருத்து சொல்ல தயாராக இருந்தார்,மற்றவர்கள் தயார் இல்லை என்ரு சூழ்நிலை நிலவியது என்ரு எடுத்துக் கொண்டாலும் கலகக்குரலில் அவர் குறித்து எத்தனையோ பதிவுகள் வெளீயிடப்பட்டிருக்கின்றன. அவரது தாத்தா விடுதலை முதல் ஆசிரியர் என்று சொல்லிய பெயர் மோசடி குறித்தும் விடுதலை பத்திரிகையின் ஆதாரம் கொண்டு விமர்சித்திருந்தீர்கள்.அது குறித்து கருத்து கேட்டிருக்கலாம். ஆனால் யாரும் பதில் கருத்து சொல்ல இயலாத பிரம்படியில் வந்த கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது இந்தியா டுடே.
அன்பழகன் இந்தியா டுடே நிருபர் துரை அரசுவுக்கு நண்பர் என்பதால் இருக்கலாம். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்னும் நிலை எடுத்ததாக கருதுகிறோம்.இது சரியா..?நீங்கள் எங்கள் கருத்தினைப் பதிவு செய்வீர்களா..?இல்லை உங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது என்பதால் நிராகரிப்பீர்களா..?காத்திருக்கிறேன்.