Friday 3 August 2012

போலீஸ் ஸ்டேஷன் சென்ற குமுதம் ஆசிரியர் இலாகா அடிதடி,பஞ்சாயத்து....

புகைப்படக்காரர் சண்முகம்
நிருபர் ரஜினிகாந்த்



இப்போதெல்லாம் ரிப்போர்ட்டர் புத்தகத்துக்குள் வரும் வெட்டு குத்து செய்திகளைவிட குமுதம் குழுமத்தின் ஆசிரியர் குழுவுக்குள் நடக்கும் வெட்டுக் குத்துக்கள்தாம் அதிகம்

சென்ற வாரம் நடந்த அப்படியொரு வெட்டுக் குத்து உங்களுக்காக...

தி.நகர் வாணி மகாலில் ஒரு பரதநாட்டிய நடன நிகழ்ச்சி. அதில் ரிப்போர்ட்டரின் நிருபர் ரஜினிகாந்த்தின் உறவினர் பெண் நடனமாடினார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது பந்தாவைக் காட்ட விரும்பிய எழுத வராத பத்திரிகையாளர் ரஜினிகாந்த் குமுதத்தின் தில்லாங்கடி புகைப்படக்காரர் சண்முகத்தை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.( இவர் ஏன் தில்லாலங்கடி புகைப்படக்காரர் என்பது பின்னால்).

போன இடத்தில் வழக்கமான பத்திரிகையாளர் பந்தாவுடன் எல்லோரையும் இடித்துக் கொண்டு முன்னால் நின்று மற்றவர்களுக்கு மறைத்துக் கொண்டு இருவரும் அலம்பல் செய்யவே அங்கிருப்பவர்கள் கண்டித்து, அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். நம்மவர்கள்தான் ஆ.போட்ட பத்திரிகையிலிருந்து வருபவர்கள் ஆயிற்றே

அந்த கோதாவில் நாங்கள் யார் தெரியுமா? கவர்ன்மெண்ட்டே எங்க கையில்என்று அதிகாரம் செய்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் விடுதலை சிறுத்தை அமைப்பாளர், இன்னோருவர் தி. நகர் போலீஸ் நிலையத்தில் செல்வாக்கு மிக்கவர். அதனால் இவர்களது அடாவடி அவர்களிடம் எடுபடவில்லை. அரங்குக்குள் ஆரம்பித்த சண்டை வெளியே வந்தும் தொடர்ந்த்து. ரஜினிகாந்தும் சண்முகமும் அங்கிருந்த பைக்குகளைத் தள்ளிவிட எதிரணியினர் இன்னும் ஆக்ரோஷமானார்கள். புகைப்படக்காரர் சண்முகத்தின் பைக் உடைக்கப்பட்டது. வெளியே நிறுத்தப்பட்டிருந்ததால் நிருபர் ரஜினிகாந்தின் ஏழு லட்ச ரூபாய் வோல்க்ஸ் வேகன் கார் தப்பியது.( வோல்க்ஸ் வேகன் கார் வைத்திருக்கும் தமிழ் நிருபர் இவர் ஒருவரே) .யாரோ போலீஸுக்கு தகவல் சொல்ல, போலீஸ் வந்து ரஜினிகாந்தையும் சண்முகத்தையும் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இவர்களை மொள்ளமாரி முடிச்சவிக்கி கேப்மாரி கணக்காக நடத்தியதாக இருவரும் வருத்தப் பட்டும் ஒன்றும் பலிக்கவில்லை. குமுதம் ஆசிரியர் குழுவில் இருவர் போலீஸ் பிடியில் வந்தது இதுவே வரலாற்றில் முதல் முறை

ஆனால் ஆசிரியர் குழுவில் இல்லாதவர்களில் முதல் முறையாக போலீஸ் பிடியில் வந்தது ஆட்டையப் போட்ட வரதராஜன் என்பதை நினைவில் கொள்க.

இப்படி பிரச்சனை தீவிரமாக, சண்முகம் குழும ஆசிரியர் கோசல் ச்சாருக்கு போன் போடுகிறார். இங்கேதான் குமுதம் உள்குத்து துவங்குகிறது. மாட்டியது செய்தி ஆசிரியர் ஜானின் அல்லக்கை ரஜினி என்று அறிந்ததும், கோசல் ச்சார் ஏரியா .சிக்கு போன் செய்து, ‘இது பத்திரிகைக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட விவகாரம்.நீங்க என்ன பண்ணனுமோ பண்ணிக்குங்கஎன்று சொல்லி கை கழுவுகிறார். அவரது விருப்பம் பிரச்சனை பெரிதாக வேண்டும். இரவாகிவிட்டது. அல்லக்கை ரஜினி, தனது குருவான ஜான்னுக்கு போன் போட அவர் தன் அடிதடி வக்கீல் ஆதரவாளர்களுடன் ஆலோசிக்கிறார். அவருக்கு இது பெரிய பிரச்சனையானால் .போ.வரதராஜன் தன்னை பலி வாங்கிவிடுவாரோ என்று பயம். இதற்குள் நள்ளிரவு ஆகி விடுகிறது. அதன் பின் ஜான் இரண்டு வக்கீல்களுடன் போலீஸ் நிலையம் சென்று சமாதானம் பேசுகிறார். விடுதலை சிறுத்தை தலைவரையே எனக்குத் தெரியும் சமாதானமாக போய்விடலாம் என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இத்தனையையும் நடக்கவிட்டு, இந்த கோஷ்டியை நன்றாக தவிக்கவிட்டுவிட்டு இரவு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போடுகிறார் கோசல் ச்ச்சார். ’பசங்க பாவம் விட்டுடங்க. எங்க சேர்மன் சொல்லிட்டார்என்ற செய்தியை சொல்லுகிறார். அதன்பிறகு இருவரும் விடுவிக்கப்படுகிறார்கள்.

விஷயம் அத்துடன் முடியவில்லை. முடியவிட்டுவிடுவாரா கோசல் ச்ச்சார். மாட்டியிருப்பது ஜான் கோஷ்டியாயிற்றே. அலுவலகத்தில் இந்தப் பிரச்சனைக்கு ஒரு விசாரணை கமிஷன் வைக்கப்படுகிறது. ஆசிரியர் குழுவினர் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு ஆசிரியர் குழுவுக்கு தொடர்பில்லாத சர்குலேஷன் ஸ்ரீகாந்த், ப்ரொடக்ஷன் உமாசேகர், அக்கவுண்ட்ஸ் அனுராதா, எச் ஆர் ப்ரியங்கா என்று ஒரு கூட்டம் அமர்ந்து சண்முகத்தையும் ரஜினியையும் திருட்டு வழக்கு கைதிகள் போல விசாரித்தார்கள்.




இரண்டு குற்றச்சாட்டுக்கள்

ஒன்று, தனியார் நிகழ்ச்சியை படமெடுக்க அலுவலக புகைப்படக்காரருடன் போனது, இரண்டாவது அங்கே ரகளையில் ஈடுபட்டதுஇந்த விசாரணையில் என்ன பேச வேண்டும் என்பதை சண்முகத்துக்கு கோசல் ச்சார் முதலிலேயே சொல்லித் தந்துவிட்டார். அவர் சொன்னபடி விசாரணையில், ‘எனக்கு ஒன்று தெரியாது. நிருபர் ரஜினி அழைத்ததால் சென்றேன். அது தனியார் நிகழ்ச்சியா, அலுவலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியா என்று எனக்குத் தெரியாதுஎன்று சண்முகம் ஒப்பிக்க ஜானின் அல்லக்கை ரஜினிக்கு திண்டாட்டமாகிவிட்டதுஏதோ உளறிவிட்டு வந்திருக்கிறார்.

விசாரணை மட்டுமில்லாமல் இருவரிடமும் வாக்குமூலமும் எழுதி வாங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் இருவருக்குமே எழுதத் தெரியாது. போட்டோகிராஃபர் சண்முகத்துக்கு எழுதத் தெரியவில்லையென்றால் பரவாயில்லை, நிருபராக இருக்கும் ரஜினிகாந்த்துக்கு எழுதத் தெரியாது என்றால்...நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதான் உண்மை. எழுதத் தெரியாமாலே இத்தனை வருடங்கள் நிருபராய் இருக்கிறார். இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு போய் வாக்குமூலத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

ஒரு பத்திரிகையில் வேலை செய்யும்போது வெளியார் நிகழ்ச்சிக்கு சென்று படமெடுக்கக் கூடாது என்பது எல்லா பத்திரிகை அலுவலகங்களிலும் இருக்கும் கட்டுப்பாடு. அதை மீறியிருக்கிறார் சண்முகம். என்னை மீற வைத்தது ரஜினி என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார். இது எதற்காக? இதுவரை சண்முகம் வெளியார் நிகழ்ச்சிகளை படமெடுத்ததில்லையா? என்ற கேள்விகளுக்கு இதோதில்லாலங்கடிசண்முகத்தின் பின்னணி

தில்லாங்கடி சண்முகம். இவர் முன்பு திருவேங்கிமலை சரவணனுக்கு நெருக்கமா இருந்தார். அவர் மூலம் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் அறிமுகம் பெற்றார். அவர்கள் வீட்டு வீசேஷங்களுக்கு படமெடுப்பார். அவர்கள் அறிமுகத்தினால் கிடைக்கும் பெரிய இடத்து புகைப்பட காண்டிராக்ட்டுகள்  மூலம் கொழுத்த பணம் சம்பாதித்தார் (இந்தப் பத்திரிகை புகைப்படக்காரர் விடுமுறைகளைக் கழிக்க போவது எங்கே தெரியுமா, பாங்காக், பட்டாயா போன்ற உல்லாச நகரங்களுக்கு).சில வருடங்களுக்கு முன்பு காற்று மாறி அடிக்கிறது என்பதை உணர்ந்து சரவணனைக் கழற்றி விட்டு டாக்டர் ஜவஹர் தான் தெய்வம் என்று டாக்டர் தரப்பு ஆட்களிடமும் டைரக்டர்தான் எனக்கு எல்லாம் என்று .போ.வரதராஜன் தரப்பு ஆட்களிடமும் அடப்பாவியாய் பேசி காலத்தை ஓட்டினார்


இதற்கிடையே மிகப் பெரிய வெளிநாட்டு செல்வந்தர் வீட்டுத் திருமணத்துக்காக அலுவலகத்துக்கு லீவு போட்டு ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து சென்று புகைப்படம் எடுத்து பெரும் தொகை சம்பாதித்து வந்தார். இதெல்லாம் வரதராஜனுக்கு தெரியாதா என்றால், தெரியும். இன்னும் சொல்லப் போனால் குமுதம் அலுவலகம் முழுவதும் திருட்டு டிவிடி சப்ளை செய்வது இந்த சண்முகம்தான். எந்தப் படமும் ரீலீஸான மறுநாளே இவரிடம் நூறு டிவிடிக்கள் இருக்கும். இதற்காக இவரைக் கூப்பிட்டு வரதாராஜன் அதட்டியதும் உண்டு. ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் மேல் கிடையாது.

ஏனென்றால் சரவணனை ஒழித்துக் கட்ட வரதராஜன் இவரைப் பயன்படுத்தியதுதான். அதே போல் இப்போது ஜானின் அல்லக்கையான ரஜினியை ஓரங்கட்ட அதே சண்முகத்தை பயன்படுத்துகிறார். ஆட்டயப் போட்டவர்களின் ஆட்டம் எப்படியிருக்கிறது பாருங்கள்.

ரஜினியை ஓரங்கட்டப்படுவது தன்னை ஓரங்கட்டப்படுவது போல என்று நினைக்கிறார் கட்டப் பஞ்சாயத்து ஜான். அதனால் எப்படியாவது .போ.வரதராஜனை சமாதனப்படுத்திவிட வேண்டும் என்று தன் வழக்கறிஞர் வட்டாரத்தில் தற்போது ஆலோசனைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.


இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் இப்படி வெட்டுக் குத்தில் இருக்கும் நபர்கள் அனைவரும் வரதராஜன் பொறுக்கி வேலைக்கு எடுத்த ஆட்கள்.( வரதராஜன் பொறுக்கி என்று சேர்த்துப் படிக்க கூடாது, நிறுத்தி இடைவெளிவிட்டுப் படிக்கவும்).


இந்த உள்குத்து எங்கு போய் முடியுமோ..! அனைவரும் வெளியே தள்ளப் படுவோமோ என்று யோசனையில் இருக்கிறார்கள் வில்கின்ஸ் வட்டாரத்தினர்...
பொறுத்திருந்து பார்ப்போம்..


No comments: