Sunday 19 February 2012

ராஜபக்‌ஷேவின் கைக்கூலி பாராட்டிய தமிழ்நாட்டு "யோக்கிய சிகாமணி" பத்திரிகை ஆசிரியர்...



.
முன்பெல்லாம் ஒரு நாடு தனது ராணுவ பட்ஜெட்டில் ஆயுத தளவாடங்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் உளவாளிகளுக்கும் மட்டும் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யும்.

ஆனால் இப்பொழுது சமீப காலங்களில் எதிரி நாட்டு பத்திரிகையாளர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிங்கள அரசோ தன் இனத்தின் எதிரியாக கருதும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கும் கூட நிதி ஒதுக்கீடு செய்தது. ஈழத்தில் நடைபெறும் இனஒடுக்குமுறையையும் அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி காலம் காலமாக ஊடகங்கள் எழுதுவது தனி வகை. அத்தோடு, இங்கே பொய்ச் செய்திகளைப் பரப்ப, போராட்டங்களை திசைதிருப்ப, சிங்களப் படைகளை இனவெறியற்ற ராணுவமாகவும், போராளிகளை தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க என்று மேலும் பல வேலைகளுக்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.


ஈழப்போரில் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பலர் இதில் விலை போனார்கள். இவர்களது விலை கொழும்பு உல்லாசப் பயணமாக இருக்கலாம் அல்லது ஒரு குடியிருப்பாக இருக்கலாம் அல்லது தனது பத்திரிகை நிறுவனம் முழுவதையும் கணிப்பொறியாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாக இருக்கலாம்.அல்லது விலை உயர்ந்த மது பானமாக இருக்கலாம்,அல்லது பதிப்பக ஆர்டராக இருக்கலாம் அல்லது சிங்கள தன்னார்வக் குழுக்களிடம் காசு வாங்குவதாக இருக்கலாம் அல்லது நல்ல செட்டில்மெண்ட்டாக இருக்கலாம்.அல்லது உடல் பசியைத் தீர்க்கும் நடிகையாக இருக்கலாம்.எதுவோ ஒன்று.

அதற்கு இந்த விலைபோன கைக்கூலிப் பத்திரிகையாளர்கள் நன்றி செய்யும் விதம் இரண்டு வகை.

இன அழிப்பில் சிங்கள அரசுக்கு பகிரங்கமாய் ஆதரவாய் எழுதுவது ஒரு வகை. சிங்கள அரசை விமர்சிக்காமல் விடுதலைப்புலிகளை மட்டும் விமர்சிப்பது, அமைதியாக இருப்பது. அல்லது கொன்றொழிக்கப்படும் பொழுது அது குறித்துப் பேசாமல் இதர அற்ப விஷயங்களைப் பேசி கவனம் திருப்புவது,அல்லது விடுதலைப்புலிகளுக்கு அரசியல் அறிவு இல்லை என்று கண்டுபிடிப்பது அல்லது இயக்கங்களுக்கிடையேயான மோதலை மிகைப்படுத்தி பேசுவது என்பன போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

எதிரெதிராக வெட்டுவதாலேயே அது வேறு இது வேறு என்று எப்படி கத்திரிக்கோல் ஆகிவிடாதோ அது போல் தான் மேற்கண்ட இரண்டு வகைப் பணியும்.

இவர்களின் ஒரே பணி சிங்கள அரசின் தமிழ் இன அழிப்பிற்கு ஆதரவாய் இருப்பது அல்லது இன அழிப்பிற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்வது அல்லது முனை மழுங்கடிப்பது. 
  
இந்த அஜெண்டாவின் படி சிங்கள அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்.ராம்.போன்றவர்கள் மற்றும் தினமலர் வகையறாக்கள் முதல் வகை. அடுத்த இரண்டாம் வகை அப்பொழுதைய இலங்கை அரசின் இந்தியாவுக்கான முன்னாள் துணை தூதர் அம்சா மூலம் இயங்குவது.

இதில் தான் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் அடக்கம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறைய பத்திரிகையாளர்கள் இந்த வலையில் விழுந்தனர். இதில் பெரும்பாலோனோர் தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை முனை மழுங்கடிப்பதில் தான் முக்கியமாக இருந்தனர்.

எடுத்துக்காட்டாய் ஒரு செய்தி பார்ப்போம்.

லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட செய்தி வெளிவருகிறது.


இதனை ஒரு பத்திரிகையில் ஒரு உதவி ஆசிரியர் தட்டச்சு செய்து டெஸ்க்கில் கீழ்க்கண்ட தலைப்புடன் 4 பத்தியாகப் போடுகிறார்.

இலங்கையில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை-சிங்கள வெறியர்கள் வெறிச்செயல் என்று.

இதனை இறுதிப்படுத்தும் அந்த நாளிதழின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் அதனை 2 பத்தியாக மாற்றி கீழ்க்கண்ட தலைப்புடன் அனுப்புகிறார்.

கொழும்பில் பத்திரிகையாளர் பலி’’

உதவி ஆசிரியர் திகைக்கிறார், என்னடா எழவு தலைப்பு இது? இதைப் பார்த்தால் சிங்கள வெறியர்கள் சுட்டதால் ஒரு நேர்மையான பத்திரிகையாளன் செத்துப் போனான்னு வாசகன் எப்படி நினைப்பான்? இது சாலை விபத்திலோ, உடல்நிலை சரியில்லாமலோ செத்துப்போனது போன்ற தொனியில் அல்லவா அர்த்தம் தொனிக்கிறது என்று. ஆனால் உதவி ஆசிரியரால்  என்ன செய்ய முடியும்?

செய்தியைத் திருத்தியது முதலாளிக்கு நெருக்கமான செய்தி ஆசிரியராயிற்றே! அவரது விலை என்னவென்று யாருக்குத் தெரியும்?

இது தான் முனை மழுங்கடிப்பது, இதைத்தான் சிங்கள இனவாதம் எதிர்பார்த்தது. இதற்குத் தான் பத்திரிகையாளர்களை விலைக்கு வாங்கியது.ஆனால் கொடுக்கப் பட்ட விலையை விட நல்ல விசுவாசமாய் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.

ஒரு பத்திரிகையாளர் சினிமா பகுதியை மட்டுமே எப்பொழுதும் பார்ப்பவர். அவருக்கு அரசியல் பகுதிக்குச் செய்தி கொடுக்கும் வேலைக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனாலும் அவரும் எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன என்று கொழும்பு சுற்றுப்பயணம் சென்று ஏக்கத்துடன் உல்லாசம் அனுபவித்து கை நிறையக் நாத்தம் பிடித்த காசுடன் வந்தார் என்று பார்த்துக் கொள்ளூங்களேன்.

இன்னொரு வாரமிருமுறை செய்தி ஆசிரியர் கருணாவின் நேர்காணலை முதன்முதலில் வெளியிட்டார். கேஷ் கேஷ் என்றலைந்த அவருக்கு விலை இரண்டு பிளாட்டுகள். அந்த பத்திரிகை நிர்வாகம் இனம் அழிந்த பின் அவரை காரணம் குறிப்பிடாமல் வேலையை விட்டுத் துரத்தியது.

கேஷ் க்குத் தான் இந்தக்கதி.ஆனால் இவருடன் பயனடைந்த இன்னும் ஒரு கூட்டாளியான கோசலையின் ராமன் உட்பட சிலருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.ஏனென்றால் கோசலையின் ராமன் சென்றதே நிர்வாகத்தின் ஆசியுடன் தான்.


ஒரு பத்திரிகை எரிக்கப்பட்டதில் அங்கு பணியாற்றிய ஒரு கணிப்பொறியாளர் இறந்துவிட்டார். அவர் யாரென்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளர் சொன்னார், அந்தப் பையன் கொழும்பு போயிட்டு வெங்கடேசபெருமாள் மாதிரி வசதியா வந்தான்ல அவனோட மருமவன்.

இவர்களைத் தவிர திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரின் பெயரைக் கொண்ட கைக்கூலி பத்திரிகையாளர் உட்பட பலர் இருக்கின்றனர்.

நிற்க....

அப்பொழுது இன அழிப்பு உச்சத்தில் இருந்த இறுதி நேரம். ஆங்கில நாளிதழ் ஒன்றில் போர்க்கள நிலவரம் நேரடி ரிப்போர்ட் என்று தொடர்ந்து செய்தி வந்து கொண்டிருந்தது.

கிளிநொச்சியில் இருந்து, வன்னியில் இருந்து, புதுக்குடியிருப்பில் இருந்து என்று. ஆனால் ரிப்போர்ட்டில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. முனை மழுங்கடிக்கும் பணி மட்டுமே தான் இருந்தது.

அப்பொழுது தான் இங்குள்ள உண்மையான ஊடகவியலாளர்களுக்கு ஒரு தகவல் தெரிந்தது.

இந்த மூத்த ஊடகவியலாளர் களத்துக்குச் செல்லாமல் கொழும்புவில் 5 நட்சத்திர விடுதியான  ஹில்டன் ஓட்டலில் சிங்கள அரசின் பராமரிப்பிலும் போஷிப்பிலும் இருந்துகொண்டு அவர்கள் அளித்த செய்திகளை எழுதுகிறார் என்று.


                            உல்லாச ஹில்டன் ஓட்டல்

ஆனால் யாராலும் உறுதியாக நம்ப முடியவில்லை, ஆனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அந்த பத்திரிகையாளரை அப்படிப் பார்க்க இயவில்லை.

 இவர் தேசத்தின் குரல் ஆண்டன் பாலசிங்கம் இறந்த அன்று சென்னை கோட்டூர்புரத்தில், உலகத் தமிழர் பேரமைப்பு அலுவலக வளாகத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஒரு மாலை நேரத்திலும், நினைவுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர் இவரா இப்படி? என்றும், இவர் தி வீக் இதழில் பணியாற்றும் பொழுதே நேர்காணல் எடுத்தவர் ஆயிற்றே என்றும் இவர் அனுபவத்துக்கு இவர் இப்படிச் செய்வாரா? என்றும் நினைத்தார்கள்.

ஆனால் அதனை அப்படியே விட்டு விட்டோம். பூனைக்குட்டி என்றாவது வெளியே வரும் என்றும் நம்பி விட்டு விட்டோம்.

ழத் தமிழர் அழிப்புப் போருக்குப் பின்னர், நிறைய ஊடகவியலாளர்கள் கொழும்பு சென்றும் வன்னி சென்றும் வந்துள்ளனர். அனைவரும் இலங்கை மற்றும் இந்திய அரசின் ஊதுகுழலாகவும், வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்யும் நல்ல கேந்திரமாக இலங்கை மாறிவிட்டது என்றும் கூறும் விளம்பரப்படங்கள் தயாரிப்பாளர்களாகவும் மாறிவிட்டனர்.

அதற்கு நல்ல ஸ்பான்சர்களையும் பெற்றுவிட்டனர். சென்று வந்தவர்கள் தமிழர்களின் தோற்கடிக்கப்பட்ட வீரம் குறித்துப் பேசுகிறார்கள், விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்பாதது குறித்து கவலைப்படுகிறார்கள், அங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கி இருப்பது குறித்து கவலைப்படுகிறார்கள், புலிகளை வீழ்த்திய ராஜபக்‌ஷேவை சிங்களர்கள் பாராட்டியதைப் பதிவு செய்கிறார்கள்.

ஆனால் அங்குள்ள நிலப்பரப்பு தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதையோ, அங்கு தமிழர்கள் பூர்வீகக்குடிகள் என்பதையோ அங்குள்ள பூர்வீகக் குடிகளுக்கு  சிங்கள அரசு இழைத்த துயரத்தையும் அதற்குக் காரணமானவர்கள் இன்னும் குற்றவாளிக் கூண்டில்கூட நிறுத்தப் படாததையும் மட்டும் மறந்தும் பேசவில்லை
விதிவிலக்கு என்று பார்த்தால் சேனல் 4 ஊடகமும், ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட ஒளிப்பதிவுகளும் தான்.

பொதுவாக இங்கிருந்து செல்லும் பத்திரிகையாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர் சொல்லும் செய்திகளை வாந்தி எடுப்பவர்களாகவும் டக்ளசை தமிழ் மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்துவர்களாகவும் தான் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2 வருடங்களாக  டெக்கான் கிரோனிக்கல் ஆங்கில நாளிதழில் அதன் கன்சல்டண்ட் எடிட்டர் பகவான் சிங்  தொடர்ச்சியாக இலங்கை நிலவரம் குறித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஈழத் தமிழர் நலன் குறித்து அதிக ’’அக்கறை காட்டுகிறார். ராஜபக்‌ஷேவின் நேர்காணலை வெளியிடுகிறார்.


                                       பகவான் சிங்

 பகவான்சிங்கின் பழைய வரலாறு நமக்குத் தெரியும். அது இப்பொழுது தேவையில்லை. ஆனால் தனது கட்டுரையில் முனை மழுங்கடிக்கும் யுக்தியை நன்கு கையாள்கிறார். ராஜபக்‌ஷே விற்கு சாமரம் வீசும் வேலையை நன்கு செய்கிறார்.இவரது கட்டுரையின் எழுத்துக்கு ஒவ்வொன்றுக்கும் நாம் எதிர்வினையாற்ற முடியும்.


ஆனால் நம்முடைய மதிப்பீட்டை விட ராஜபக்‌ஷேவின் நண்பர்கள் அளித்த சான்றிதழ் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கடந்த 8 பிப்ரவரியில் ஈழத்தில் யாழ்ப்பாண மாவட்டம் சாகவச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் பகவான் சிங்கை உச்சி முகர்ந்து டக்ளஸ் தேவானந்தா பாராட்டியிருக்கிறார்.

அது இது தான்.


http://www.epdpnews.com/news.php?id=14607&ln=tamil

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது உரையில் தெரிவித்ததாவது 

எமது அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அன்றி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் எவராயினும் சரி கொழும்பில் இருந்து யாழ் நோக்கி அல்லது வடக்கு நோக்கி வருவதென்றால் அது ஒரு அதிசயமான நிகழ்வாகவே இருக்கும். 

ஆனாலும் எமது ஐனாதிபதி அவர்கள் இப்போது வட பகுதி தமிழ் மக்களை சந்திப்பதற்காக இங்கு அடிக்கடி வந்து போகின்றார். 

அதற்கு காரணம் அவர் தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையும் பற்றுதலுமேயாகும். 

இவ்வாறு இன்று வந்திருக்கும் அவரை தமிழ் மக்களின் சார்பாக நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன். 

வலிமையுள்ளவரால் மட்டுமே அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 

பலமுள்ள அரசாங்கத்தால் மட்டுமே அரசியலுரிமைப் பிரச்சினை முதற்கொண்டு அiனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். 

இந்த நாட்டில் அழிவு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் மட்டுமே நாம் விரும்பும் அரசியல் தீர்வையும் இங்கு நடைமுறைப்படுத்த முடியம். 

அண்மையில் பகவான்சிங் என்ற பத்திரிகையாளர் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்திருந்தார். 

அவர் தமிழ் நாடு திரும்பியதும் இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்திருந்தார். 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் தமிழ் மக்களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இனி எக்காலத்திலும் எந்த ஜனாதிபதியாலும் தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்திருக்கிறார். 

இதுதான் உண்மை.. ஆகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது ஆட்சிக் காலத்தையும், ஜனாதிபதி அவர்களையும் அனைத்து தமிழ்த் தலைமைகளும் 
அரசியலுரிமைப் பிரச்சினைத் தீர்வுக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். "






ராஜபக்‌ஷேவின் கைக்கூலியும் தமிழ்நாட்டில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடியவருமான டக்ளஸ் தேவானந்தா எவர் ஒருவரையும் "காரணம் காரியம்' இல்லாமல் புகழ மாட்டார்.

ராஜபக்‌ஷேவின் அருகில் இருக்கும் அவருக்கு தனது நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று நன்கு தெரியும்.


அவர்களை எப்படிப் பயன்படுத்துவது என்றும் தெரியும்.அவர்களை எப்படி மகிழ்விப்பது என்றும் தெரியும்.


தொடர்ந்து அவர்களைத் தம்முடன் தக்க வைக்கும் வித்தையும் நன்கு தெரியும்.


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.உன் நண்பன் யாரென்று சொல்.நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று.

இதற்கு மேல் பகவான் சிங் எழுத்துக்கு எதும் சான்றிதழ் வேண்டுமா?

இப்போதுதான் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்திருக்கிறது. இன்னும் நிறைய வெளிவர இருக்கின்றன,பெருச்சாலிகளும்,பிசாசுகளும்...

தொடரும்...

No comments: