Tuesday 27 September 2011

பத்திரிக்கை அதிபர்கள் முகமூடியில் ஜேப்படி திருடர்கள்





 கானாடுகாத்தான் பகுதிகளில் செட்டிநாட்டு வீடுகள் மிகவும் பழமை வாய்ந்தவை, அரண்மனையைப் போல பிரம்மாண்டமானவை.கலை நுணுக்கம் வாய்ந்தவை.இதன் உள்ளே விலை மதிப்புமிக்க பொருட்கள் நிறைய இருக்கும்.இந்த வீடுகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் வெளியூர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ இருப்பர்.வருட்த்திற்கு ஒருமுறையோ அல்லது பல வருடங்களுக்கு ஒரு முறையோ வந்து விட்டு ஓரிரு நாளில் சென்று விடுவர்.வீடுகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் இங்கு யாராவது ஒருவரை நியமித்து விட்டுச் செல்வர்.
ஆனால் இவ்வாறு நியமிக்கப்படும் காவலாளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிவர்.இதனை அறிந்து கொண்ட திருடர்கள் காவலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு நள்ளிரவில் வீடுகளின் உள்ளே நுழைந்து இவ்வளவு ஏன்,சில நேரங்களில் பட்டப் பகலில் கூட உள்ளே நுழைந்து நீண்ட காலம் தங்கி,உண்டு உறங்கி சாப்பிட்டு(கொள்ளையடிப்பதற்கு அவ்வளவு பொருட்கள் இருக்கும்)வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள்,நகைகள்,தேக்கினால் செய்யப்பட்ட கதவு, நிலை,ஜன்னல்,பாத்திரங்கள்,நிலைக்கண்ணாடி,உட்பட எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடிச் சென்று விடுவர்.ஒத்துழைத்த வீட்டின் காவலாளிக்கு உரிய பங்கு கிடைக்கும்.காவல்துறையும் இதனைப் பெரிதாக்க் கண்டு கொள்ளாது.சில காலம் கழித்துப் பார்த்தால் அரண்மனை மொத்தமும் மொட்டையடிக்கப் பட்டிருக்கும்.



திருடர்கள் இப்படி என்றால் வீட்டைக்காவல் காக்க நியமிக்கப்படும் சில வகை காவலாளிகள் மிகவும் நயவஞ்சகர்கள்.குயுக்தியானவர்கள்.உடம்பு முழுவதும் திருட்டு புத்தி தான் இருக்கும்.இவர்கள் மற்ற யாரையும் கூட்டுச் சேர்க்காமல் அவர்களே திருடர்களாக மாறிவிடுவர்.அனைத்துப் பொருட்களையும் அவர்களே திருடி விடுவர்.எதற்கு யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டும்?முழுவதையும் நாமே ஆட்டையைப் போட்டுருவோம் என்ற நல்ல எண்ணம்.இவர்களே திருடர்களாக மாறி விடுவதால் ஊர் உலகத்திற்கு எளிதாய் வெளியில் தெரியாது.முதலாளியே வந்து கண்டுபிடித்தால் தான் உண்டு.அவர் தான் வர மாட்டாரே!வந்தாலும் அவரால் நம்மை என்ன செய்ய முடியும் என்பது தான்.இந்த திருட்டுக் கும்பல்.
திருடியதில் திருப்தி அடையாமல் சில சமயத்தில் முதலாளியின் வீக்னெஸ்ஸைப் பயன்படுத்தி வீட்டின் உரிமையைத் தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்ளும் அயோக்கியர்களும் உண்டு.இவர்கள் இதனைத் திருட்டு என்ற சொல்ல மாட்டார்கள்.வீட்டின் பத்திரத்தையே தனது பெயருக்கு அடாவடியாக மாற்றிவிட்டு வீடே என்னுடையது தான் என்று தைரியமாகச் சொல்வார்கள். நீண்ட நாள் கழித்து வரும் உரிமையாளருக்கு இது தெரிய வரும்.ஆனாலும் ஒரு சிலரைத் தவிர இது குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை.கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.ஏனென்றால் அவருக்கு உள்ளூர்ச் சொத்தின் மீது அவ்வளவாக அக்கறை இருக்காது,அதற்கு 2 காரணங்கள் உண்டு.

முதலாவது அவர் தற்பொழுது இருக்கும் நாட்டில்,இங்கு உள்ள வீட்டின் மதிப்பை விட பலப்பல மடங்குகள் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்திருக்கும்.அங்கேயே செட்டில் ஆகியிருப்பார்.அதனால் பூர்வீகச் சொத்தின் மீது அதிக அக்கறை இருக்காது.இரண்டாவது,இங்கு ஆட்டையைப் போட்டிருக்கும் திருடர்கள் கீழ்த்தரமானவர்கள்.பொறுக்கிகள்.எதற்கு அவர்களுடன் சண்டை போட்டு நாம் அசிங்கப் பட வேண்டும் என்ற எண்ணம் தான்.இப்படிப்பட்ட நபர்கள் யார் வீடு என்றாலும் அச்சப்பட மாட்டார்கள்.துணிந்து கைவைத்து விடுவார்கள்.

அது உள்துறை அமைச்சர் வீடு என்றாலும் சரி,குமுதம் முதலாளி வீடு என்றாலும் சரி.ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் குமுதம் முதலாளி வீட்டில் நீண்ட காலம் வேலை பார்த்த வரதன் கை வைத்து விட்டான்.பிரச்சனை காவல் நிலையம் வந்தது.நள்ளிரவு வரதனைக் கைது செய்து விட்டார்கள்.ஆனால் குமுதம் முதலாளி பெரிய அளவில்  நடவடிக்கை வேண்டாம்.எச்சரித்து விட்டு விடுங்கள் என்று சொன்னபின் வரதன் எச்சரித்து அனுப்பப்பட்டான். 


இப்பொழுது புதிதாகக் கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கானாடுகாத்தான் பகுதியில் கொள்ளை அடிக்கும் திருடர்கள்,தங்கள் நடை உடை பாவனைகள் முழுவதையும் மாற்றி சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்குத் தங்கள் ஜாகையை மாற்றி விட்டதாகவும் தகவல்ஆனால் கானாடுகாத்தான் பகுதியிலாவது காவலாளி திருடனாக மாறி விட்டான்.இங்கோ நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அயோக்கியத்தனங்களையும் உலக்குக்கு எடுத்துரைக்கும் இடத்திலும் அதனைத் தட்டிக் கேட்பதாகவும் கூறிக் கொண்டிருப்பவர்கள் இப்பொழுது ஆட்டையைப் போட்டு உரிமையாளனாக மாறி விட்டார்கள்.

நாடு போகும் போக்கினை நினைத்தால் பயமாக இருக்கிறது.எதற்கும் எச்சரிக்கையாக அந்தப் பக்கம் செல்லுங்கள்.உங்கள் பாக்கெட்டில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தைத் திருடினாலும் திருடி விடும் இந்தக்கும்பல்.
எச்சரிக்கை!
.


No comments: