Friday 16 September 2011

அப்பாடா..நிம்மதிப் பெருமூச்சு விடும் பி.ஆர்.ஓ.க்கள்.



மானியக் கோரிக்கை முடிந்த பின்பு தான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள் பி.ஆர்.ஓ.க்கள் மற்றும் உதவிப் பி.ஆர்.ஓ.க்கள்.இதற்குக் காரணம்.செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளர்களை விட பிரியாணிக்கும்,கவருக்கும்,காம்ப்ளிமெண்ட்டுக்கும் வரும் நபர்களின் தொல்லை தான் அதிகமாக இருக்கிறதாம்.கடைக்கு வராத பத்திரிகையில் இருந்து செய்தி சேகரிக்க வருவதாகச் சொல்லி தலைமைச் செயலக செய்தியாளர் அறையில் கடை விரிப்பவர்கள் தொல்லை அதிகமாம்.இவர்களால் உன்மையிலேயே செய்தி கொடுக்கும் செய்தியாளர்களுக்கும்,செய்தித் துறை அதிகாரிகளுக்கும் பெரும் மண்டையிடியாம்.

இதனைத் தடுக்க வேண்டிய செய்திப் பிரிவோ விழி பிதுங்கி நிற்குது.செய்தி சேகரிக்க வரும் நிரூபர்களின் நிலையும் இது தான்.உச்சக் கட்டமா சாப்பாட்டு பொட்டலத்துக்க்காக 200 பேருக்கு மேல காத்திருக்காங்கன்னு செய்தித் துறை கொடுக்குற பட்டியலால அமைச்சர்களின் அறையே அதிர்ந்து போனதாம்.

இப்பத் தான் அவங்க நிம்மதி பெருமூச்சு விடுகின்றார்களாம்

No comments: